உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டா பெயர் மாற்றத்துக்கு இரட்டை கட்டணம் வசூல்

பட்டா பெயர் மாற்றத்துக்கு இரட்டை கட்டணம் வசூல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வீடு, மனை வாங்குவோர், அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கு, இரண்டு முறை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர், பத்திரப்பதிவை முடித்தவுடன், பட்டாவில் பெயர் மாற்ற வேண்டும். இதில், மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக, விதிமுறைகளை அரசு திருத்தி அமைத்துள்ளது. மக்களுக்காக, அரசு தரப்பில் என்ன நடவடிக்கை எடுத்தாலும், அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாகவே, வருவாய் துறை அதிகாரிகள் செயல்படுகின்றனர். இதில், முக்கிய திருப்பமாக, ஒரு சர்வே எண்ணுக்கு உட்பட்ட முழு சொத்தையும் விற்கும் போது, அதற்கான பத்திரப்பதிவுடன், பட்டா மாறுதல் பணிகளையும் முடிக்க உத்தரவிடப்பட்டது.இதன்படி, பத்திரப்பதிவின் போது, பட்ட மாறுதலுக்காக, 450 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக, சார் - பதிவாளரே பட்டா, பத்திரம், அடையாள சான்று போன்ற விபரங்களை சரி பார்த்து, ஆன்லைன் முறையில் அதை பதிவிடுகிறார். இதற்கான ஒப்புகை சீட்டும், சொத்து வாங்கும் நபருக்கு வழங்கப்படுகிறது. இந்த ஒப்புகை சீட்டு அடிப்படையில், வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகி, பெயர் மாற்றப்பட்ட பட்டா பிரதியை பெற வேண்டும். ஆனால், வருவாய் துறை அதிகாரிகள், ஆன்லைன் முறையில் சார் - பதிவாளர்கள் அனுப்பும் விபரங்களை ஏற்க மறுக்கின்றனர். அதனால், பட்டா மாறுதல் பணிகள் முடங்கியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பட்டா மாறுதலுக்கு மீண்டும் மீண்டும் கட்டணம் வசூலிப்பது ஏன் என்றும், அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்து, நில அளவை துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: பத்திரப்பதிவு நிலையிலேயே, சொத்து குறித்த அனைத்து ஆவணங்களும், சார் - பதிவாளர் பார்வைக்கு வருகின்றன. அவர், சரிபார்த்து உறுதி செய்த பின், பட்டா பெயர் மாற்ற வேண்டியது தான், தாலுகா அலுவலக அதிகாரிகள் பணி.இதில், அரசு பிறப்பித்த விதிகளுக்கு மாறாக, தானியங்கி முறையில் நடக்கும் பட்டா மாறுதல் பணிகளை, கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் முடக்குகின்றனர். பட்டா பெயர் மாற்றத்துக்கு மீண்டும் விண்ணப்பம் செய்யும்படி கட்டாயப்படுத்துவதும், கட்டணம் வசூலிப்பதும் தொடர்கிறது. இது, அரசின் விதிமுறைகளை அப்பட்டமாக மீறும் செயல். இதுபோன்று கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள் மீது, வருவாய் துறை நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Subramanian
ஏப் 02, 2024 21:28

வருவாய் மற்றும் பேரிடர் துறை என்பது அதிகாரிகளுக்கு வருவாய்- மக்களுக்கு பேரிடர் போல் ஒரு தோற்றத்தை உருவாக்காமல் இருக்க வேண்டும்


muthu Rajendran
ஏப் 02, 2024 13:51

பதிவு அலுவலகத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட செட்டில்மென்ட் பத்திர நகல் சம்பந்த பட்ட வட்டாச்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது செட்டில்மென்ட்ட்டில் இரண்டு பெயர்கள் இருந்தும் வட்டாச்சியர் அலுவலகம் ஒரு பெயரில் பட்டா வழங்குகிறது இது கவனக்குறைவா அல்லது வேண்டுமென்றே செய்கிறார்களா ஆன் லைன் சேவையை முறியடிக்க வருவாய் துறையினர் செய்யும் வேலையா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும்


Bullet Arumugam
ஏப் 01, 2024 11:06

பட்டா பெயர் மாற்றவோ அல்லது உட்பிரிவு செய்யவோ வருவாய் துறைக்கு மனு செய்தால் எந்த மேசையில் மனுகொடுத்மொ அந்தமெசையில் நம் பணத்துக்காக காத்து யிருக்கிறது அதை பொல் ஒவ்வொரு நாற்காலி க்கு பணம் கொடுக்க வேண்டி உள்ளது இது நெடுஞ்சாலையில் உள்ள சுங்சவடில் பராமரிப்பு கண்டனம் போல் வருவாய் துறையிலும் சுங்கச்சாவடி போல் ஒவ்வொரு நார்க்காலிக்கும் பணம் கொடுக்க விட்டல் மனு கணமல் போகி விடும் அல்லது இன்று போய் நாலைவா கதை ஆகிவிடுகிறது இதற்கு காரணம் நல்ல படித்த வனுக்கு வேலை இல்லாத காரணம் நாட்டின் மூன்றாம் கண் ஊடகங்கள் பார்வை இழந்து உள்ளது இதுவும் ஒன்று காரணம்


Veeramani P
ஏப் 01, 2024 08:26

காரணமே இல்லாமல் நிராகரிக்படுகிரது, சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு போண் செய்தால் அது தொடர்ந்து engaged ஆக உள்ளது, வேண்டும் என்றே அப்படி செய்ய படுகிறது இலவச தொலைபேசி எண் கூட இல்லை பணம் பார்க்க இவர்கள் இப்படி செய்கிறார்கள் இவர்களை என்ன செய்வது என்றே தெரியவில்லை கடவுளுக்கு தான் வெளிச்சம்


mohamedismail
ஏப் 01, 2024 06:51

Corruption have been prevailed always in Tamilnadu Revenue Dept


mohamedismail
ஏப் 01, 2024 06:50

கையூட்டு சரளமாக புழங்கும் துறை தமிழ்நாடு வருவாய் துறை


mohamedismail
ஏப் 01, 2024 06:46

அரசு துறைகளில் கையூட்டு அதிகமாக வாங்கும் துறை வருவாய் துறை ஆகும்


சூரியா
ஏப் 01, 2024 05:55

கட்டணத்தை நான்கு முறைகூட கட்டலாம். தாலூக்கா அலுவலர்கள், பட்டா பெயர் மாற்றுதலுக்காகத் தங்களது அலுவலகத்திற்கு வரச் சொல்வது இதர பணம் வாங்குவதற்குத்தான்! இந்த நடைமுறையை, எந்த சட்டத்தால் தீர்க்க முடியாது. தகுதி பார்க்காமல், இட ஒதுக்கீட்டின் மூலமே வேலைக்கு ஆள்களை எடுத்தால் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?


Kasimani Baskaran
ஏப் 01, 2024 05:54

பத்திரப்பதிவுத்துறை என்றால் பணம் பண்ண ஏதுவான துறை கொள்ளை கட்டணம் என்பதால் நிலத்தின் சந்தை மதிப்பை விட குறைவாக காட்டுவது


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை