உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொய் வழக்கில் டி.எஸ்.பி., கைதா? பொன் மாணிக்கவேல் வீட்டில் ரெய்டு

பொய் வழக்கில் டி.எஸ்.பி., கைதா? பொன் மாணிக்கவேல் வீட்டில் ரெய்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சிலை கடத்தல் தொடர்பாக, பொய் வழக்கு பதிவு செய்து, டி.எஸ்.பி.,யை கைது செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். தமிழக காவல் துறையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பொன் மாணிக்கவேல் பணியாற்றிய போது, சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த, சர்வதேச சிலை கடத்தல்காரர் தீனதயாளன், 83 என்பவரை கைது செய்தார். அவர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், திருவள்ளூரில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த காதர் பாஷா மற்றும் கோயம்பேடு காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.,யாக இருந்த சுப்புராஜ் ஆகியோர், 2017ல், பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இருவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்; பின், ஜாமினில் வெளியே வந்தனர். கைது நடவடிக்கைக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் காதர் பாஷா வழக்கு தொடர்ந்தார். 'தீனதயாளனுக்கு ஆதரவாக பொன் மாணிக்கவேல் செயல்பட்டார். அவரை வழக்கு ஒன்றில் தப்பிக்க வைக்க, என் மீது பொய் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். இதுதொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்றும் கோரிக்கை விடுத்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும், விசாரணை அதிகாரியாக, டி.ஐ.ஜி., ரேங்கிற்கும் குறையாத ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன்படி, 2022ல், சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். அதில், பொன் மாணிக்கவேல் பெயரும் சேர்க்கப்பட்டது. அவர், 2018ல் ஓய்வு பெற்றார். எனினும், பொன் மாணிக்கவேல் பொய் வழக்குப் பதிவு செய்து, டி.எஸ்.பி.,யாக இருந்த காதர் பாஷாவை கைது செய்தாரா; சர்வதேச சிலை கடத்தல்காரர் தீனதயாளனை தப்பிக்க வைக்க முயற்சி செய்தாரா என்ற கோணத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.இது தொடர்பாக, பொன் மாணிக்கவேல், காதர் பாஷா மற்றும் இறந்து போன தீனதயாளன் ஆகியோரின் வங்கி பரிமாற்ற ஆவணங்களை சேகரித்துள்ளனர். அதன் அடிப்படையில், சென்னை பாலவாக்கம், காமராஜர் சாலையில் உள்ள பொன் மாணிக்கவேல் வீட்டில், நேற்று காலை 5:30 மணியில் இருந்து இரவு வரை, சி.பி.ஐ., அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

சட்டப்படி செயல்பட்டேன்!

பணியில் இருந்த போது, சட்டத்திற்கு உட்பட்டு பலர் மீது நடவடிக்கை எடுத்துள்ளேன். அவர்கள் கொடுத்த புகார்களால், என் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. அவற்றை சட்ட ரீதியாக சந்தித்து வருகிறேன். சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். என்னிடம் இருந்த ஆவணங்களை, அவர்களிடம் சமர்பித்தேன். குற்றம் செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க, நான் எப்போதும் தயங்கியது இல்லை. அந்த வகையில் தான் காதர் பாஷா உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை எடுத்தேன்.- பொன்மாணிக்கவேல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Jay
ஆக 11, 2024 10:20

கோயில்கள், கோயில் சிலைகள் என்று யார் காப்பாற்ற நினைத்தாலும் திமுக விட்டு வைக்காது. அவ்வப்போது கோயிலுக்கு சென்று போஸ் கொடுத்த யோகி பாபு வுக்கு இன்று பட வாய்ப்பு இல்லை, ஓட்ட சீரியலில் நடிக்க வேண்டி உள்ளது.


பாமரன்
ஆக 11, 2024 10:08

இந்த விசாரணையை நடத்துவது மத்திய அரசின் கூலிப்படைன்னு கூட புரியாமல் டீம்காவை திட்டுதுக அப்ரசண்டிக... ஒருத்தன் ஓவரா உத்தமராய் இருப்பதா தனக்கு தானே சர்டிபிகேட் குடுத்து கிட்டா எதாவது வில்லங்கம் கட்டாயம் இருக்கும்..


Sampath Kumar
ஆக 11, 2024 09:49

இவரு பதவியில் இருந்த பொது நடந்து கொண்ட விதம், athikara துஷ்பிரயோகம் மற்றும் சில தில்லுமுல்லுகள் அப்போதே புகாராக வந்தது ஆனாலும் அந்த அரசு அதனை கண்டுகொள்ள வில்லை இன்றய அரசு அதனை செய்து வருகிறது இதில் திரவிட விஷம் திராவிட மாடல் இங்கு இருந்து வந்தது என்று ஆர்ய மாடல் ஆசாமிகள் சொல்ல முடியுமா ...


Kumar Kumzi
ஆக 11, 2024 13:45

ஓசிகோட்டர் கொத்தடிமைகளுக்கு கண் இருந்து பார்வை தெரியாது காது இருந்தும் கேக்காது சுயமா சிந்தித்தித்து செயல்பட தெரியாத முண்டங்கள்


sethu
ஆக 11, 2024 09:35

இன்று தமிழகத்தில் மகா யோக்கியனின்ஆட்சி நடக்கிறது அதனால நல்லவர்களை உள்ளே அனுப்பிவிட்டு கொள்ளை அடிக்க மகாதிடடம் போட்டு இயங்குகிறது மர்ம கூட்டம் எண்ணத்திற்கும் சுமைதான்


Swaminathan L
ஆக 11, 2024 09:19

கத்தரிக்காய் முற்றி கடைத்தெருவுக்கு வரட்டும். சிலைகள் திருட்டு, கடத்தல் விவகாரத்தில் எவ்வளவு ஆழ்ந்து மோசடிகள், குற்றங்கள் நடந்துள்ளன, எவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்று விசாரணை, வழக்கு, தீர்ப்பில் தெரிய வரும். ஒருவரையொருவர் குற்றச்சாட்டினால் தன்னால் உண்மை வெளி வரும்.


Parthasrathi
ஆக 11, 2024 08:50

உத்தமர் என்று நிரூபணம் ஆனால் சி பி ஐ , அரசும் பொன் மாணிக்கவேல் அவர்களிடம் பகிரங்க மன்னிப்பும் அபராதமும் செலுத்து மா


அரசு
ஆக 11, 2024 08:14

உத்தமன் என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்பவர்கள் அனைவரும் உத்தமர்களாக இருப்பது இல்லை. சிபிஐ விசாரணை முடிந்த பிறகே அவர் உத்தமரா இல்லையா என்பது தெரிய வரும்.


bgm
ஆக 11, 2024 15:30

அப்போ spectrum முறைகேட்டில் தன்னை உத்தமன் அப்டின்னு சொன்ன வங்கலும்மா


Kasimani Baskaran
ஆக 11, 2024 07:47

நேர்மையாக ஒரு அதிகாரி இருந்துவிட்டால் அவரை ஒழித்துக்கட்ட பலர் பொய் வழக்குகளை போட்டு தொல்லை கொடுக்கிறார்கள். நேர்மையாக இருந்தால் சொற்பமான சம்பளம் - ஒய்வு பெற்ற பின் அதையும் தனிப்பட்ட வழக்குகளை நடத்த செலவு செய்து விட்டு திருவோடுதான் எந்தவேண்டும். இதை பார்த்து எவனும் நேர்மையாக இருக்க நினைக்கவே மாட்டான்.


tmranganathan
ஆக 11, 2024 07:40

நல்லவர்களுக்கு ongolean ஆட்சி udhavaadhu. sekarbabuvai jailil thalluvennu ponaar sonnaar. adhuve vinayaaha poyvittadhu. kadavul ponnarai kaappaar.


Kalyanaraman
ஆக 11, 2024 07:13

வாய்மையே நிச்சயம் வெல்லும்.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ