உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊட்டி, கொடைக்கானல் செல்ல நாளை முதல் இ -பாஸ்

ஊட்டி, கொடைக்கானல் செல்ல நாளை முதல் இ -பாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு, கோடை காலத்தில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் வருகை தருகின்றனர்.இதனால், சுற்றுலா வருவோரின் வருகையை முறைப்படுத்தும் நோக்கில், அவர்களின் விபரங்கள், வருகை, புறப்பாடு, வாகன எண், தங்குமிடம் உள்ளிட்டவற்றை அடையாளப்படுத்தி, இ பாஸ் நடைமுறையை கொண்டு வர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி, இன்று முதல் epass.tnega.org என்ற இணைய முகவரியில் இ பாஸ் விண்ணப்பிக்கும் நடைமுறையை சுற்றுலா பயணியர் கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த நடைமுறை 7ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.இ பாஸ் விண்ணப்பிக்க உள்நாட்டு பயணியர் தங்கள் மொபைல் போன் எண்ணை பயன்படுத்தலாம். வெளிநாட்டு பயணியர் தங்கள் மின்னஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த நடைமுறையால் சுற்றுலா பயணியருக்கோ, வணிக ரீதியாக வந்து செல்வோருக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

venugopal s
மே 06, 2024 15:45

ஈ பாஸ் என்பது வாகனங்களுக்கு மட்டுமே மனிதர்களுக்கு அல்ல. ஊட்டி கொடைக்கானல் பஸ்ஸிலோ ரயிலிலோ போனால் ஈ பாஸ் அவசியம் இல்லை.


RAAJ68
மே 06, 2024 13:49

பேருந்தில் செல்பவர்களுக்கு பாஸ் வாங்க வேண்டுமா வேண்டாமா என்று தமிழக அரசிடம் கேட்டு விவரமான செய்தியை போடவும் விவரமான செய்தியை போடவும்


RAAJ68
மே 06, 2024 13:47

கொடைக்கானல் அல்லது ஊட்டிக்குச் சென்ற சில நீதிபதிகள் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டு கஷ்டப்பட்டு இருப்பார்கள் அதன் பிறகு கோர்ட்டு தானாக முன்வந்து இ பாஸ் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டிருக்க வேண்டும் உத்தரவிட்டிருக்க வேண்டும்.


Lion Drsekar
மே 06, 2024 12:52

மாவட்ட ஆட்சியாளர் மிக அருமையாக பேட்டி அளித்திருப்பது ஊடகங்களில் வெளிவந்ததே, எல்லோருக்கும் ஈ பாஸ் வழங்கப்படும் ஒவ்வொரு வாகனத்துக்குள் எத்தினை நபர்கள் உள்ளே வருகிறார்கள் என்ற எண்ணிக்கையை மட்டும் கணக்கில் எடுக்கிறோம் என்று, ஆகவே யாருக்கும் எந்த ஒரு பயமும் வேண்டாம், வந்தே மாதரம்


Kumar Kumzi
மே 06, 2024 10:40

விடியலின் திராவிஷ கலெக்சன் மாடல்


Vathsan
மே 06, 2024 10:59

பாத்து எப்போவுமே திராவிடத்துக்கு மேல டென்ஷன்ல ரத்த குழாய் வெடித்துப்போகப்போகிறது இது கோர்ட் தீர்ப்பு படி நடக்கிறது


GMM
மே 06, 2024 10:06

இபாஸ் மாநில, மாவட்ட அளவில் கூடாது அதிகார துஷ்பிரயோகம் சட்ட விரோதம் பொது போக்குவரத்து ஒழுங்கு படுத்த சாலை அகலம் போன்ற வழிமுறைகள் உண்டு இஷ்டம் போல் அரசு உத்தரவு வெளியிட முடியாது இது போல் ஒரு காரணம் சொல்லி கேரளா, கர்நாடகா, ஆந்திரம் இந்த முறையை கொண்டுவர முடியும் அது கட்டண அடிப்படையில் கூட மாறும் பின் மாநில தாவா உருவாகும்


Indhuindian
மே 06, 2024 09:03

எல்லோருக்கும் ஈ பாஸ் உண்டு அரசு பஸ்ஸுல வரவங்களுக்கு யீ பாஸ் தேவையில்லை அப்புறம் எதுக்கு இந்த கூத்து திராவிட மாடல் ஒண்ணுமே புரியாலே


Vathsan
மே 06, 2024 11:34

திராவிட மாடல் பிடிக்க வில்லை என்றால் UP க்கு செல்லலாமே


Saai Sundharamurthy AVK
மே 06, 2024 08:47

வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி. ஆ.ராஜாவுக்கு வேண்டியவர் நீலகிரி கலெக்டர்! நீலகிரி கலெக்டர் ஸ்டாலினுக்கு சாமரம் வீசுபவர். ஆக, E- Pass முறையால் ஏதோ திருட்டுத்தனம் நடக்கப் போகிறது என்று மட்டும் புரிகிறது.


VENKATASUBRAMANIAN
மே 06, 2024 08:24

காசு அடிக்க புதிய வழி புரோக்கர்கள் வலிமை அடைவார்கள்


RAAJA69
மே 06, 2024 08:10

‍சரியாக புரியல. சுற்றுலா பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்றால் எதற்காக இ பாஸ். சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்தவதற்கு தானே இந்த நடைமுறை இந்த நடைமுறை? பேருந்தில் செல்பவர்கள் எப்படி E Pass பெற முடியும். மொத்தத்தில் காவல் துறைக்கு கொண்டாட்டம் தான்.


Vathsan
மே 06, 2024 11:32

பேருந்தில் செல்பவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவுதான் எவ்வளவு பேர் பேருந்தில் வருகிறார்கள் என்ற விவரம் சேகரிப்பது எளிது அதனால் இ-pass அவர்களுக்கு பொருந்தாது ஆனால் தனியார் வாகனத்தில் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் இப்போது அரசுக்கு எத்தனை பேர் தனியார் வாகனங்களில் வருகிறார்கள் என்பது சுத்தமாக தெரியாது இது ஒரு black-box அதனால் epass நடைமுறை கண்டிப்பாக தேவை இதனால் பின்னாட்களில் எதுவும் ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் அப்ளை பண்ண வேண்டும் என்றால் நடவடிக்கை எடுக்க முடியும் நமது இயற்கை வளங்களை பாதுகாக்க அது அவசியம் அதுவும் epass எடுப்பது ஆன்லைனில் மிகவும் எளிது எதற்கு எடுத்தாலும் அரசை குறை சொல்லுவதை நிறுத்துங்கள்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ