உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வயது முதிர்ந்த விவசாயத் தம்பதி படுகொலை; அவிநாசி அருகே பயங்கரம்

வயது முதிர்ந்த விவசாயத் தம்பதி படுகொலை; அவிநாசி அருகே பயங்கரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே விவசாயத் தம்பதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திருப்பூர், அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் ஊராட்சி ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தம்பதியர் பழனிசாமி, 84, அவரின் மனைவி பர்வதம், 70, வசித்து வந்தனர். பிள்ளைகள் திருமணம் ஆகி வெளியூர்களில் வசித்த நிலையில், இந்த தம்பதி மட்டும் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9dluey6o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் தம்பதி வீட்டில் இருந்து வெளியில் வரவில்லை. சந்தேகம் அடைந்த பக்கத்து தோட்டத்துக்காரர் சென்று பார்த்த போது, தம்பதி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீஸ் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.பல்லடம் அருகே சில மாதங்களுக்கு முன் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த வயது முதிர்ந்த கணவன் மனைவி, அவர்களது மகன் ஆகிய மூவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், கொலையாளிகள் யார் என்பதை இன்னும் கண்டறிய முடியவில்லை.இத்தகைய சூழ்நிலையில் தற்போது அவிநாசி அருகே இந்த படுகொலை சம்பவம் நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

நிக்கோல்தாம்சன்
மார் 13, 2025 20:57

பங்களாதேசிகளை அஸ்ஸாமிகள் என்று உள்ளே நுழைத்த மக்களை துவைத்து எடுக்கும் காலம் தூரமில்லை


orange தமிழன்
மார் 13, 2025 17:35

தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியில் குற்றம், தினம் தினம் நடந்து கொண்டிருக்கிறது.. .ஆளும் தீயமுகவிற்கு இதை பற்றி கவலை இல்லை.....ஹிந்தி எதிர்ப்பு,தொகுதி சீரமைப்பு நாடகம், பார்லியில் அநாகரிகமான செயல் மற்றும் முதல்வர் தனக்கு தானே பாராட்டி கொள்வதில் தான் கவனம்..... தீய முகவை ஒழித்து கட்ட வேண்டிய கட்டாயம் தமிழக மக்களுக்கு.......


SRIRAM
மார் 13, 2025 17:33

எவனாலும் குறை கூற முடியாத ஆட்சி.... ஹா ஹா.... டோ... அப்பா


visu
மார் 13, 2025 15:49

பெரும்பாலும் ஒரே கும்பலா இருக்கும் ஏற்கனவே செய்த கொலையில் மாட்டாததால் தைரியமா அடுத்த கொலை தனியா இருக்குறவங்களை கொல்றாங்க


Siva Balan
மார் 13, 2025 15:04

செத்தது தமிழனா திராவிடனா.... அதை சொல்லுங்க முதல்ல. தமிழன்னா பல்லடம் கொலை போல் கண்டும் கானாமல் இருந்திடும் இந்த திராவிட அரசு. திராவிடன் என்றால் சாத்தான்குளம் மரணம் போல் பொங்கனும்.


Nagarajan D
மார் 13, 2025 14:12

தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கா சிறப்பாக உள்ளது - நம்புங்க இல்லையென்றால் ரத்தம் கக்கி ....


sridhar
மார் 13, 2025 13:51

அப்பா, என்னப்பா, இது தப்பப்பா நீ தமிழ்நாட்டை விட்டு போப்பா .


Sivagiri
மார் 13, 2025 13:04

ரியல் எஸ்டேட் - மற்றும் அரசியல் புள்ளிகளின் பின்னணியாகத்தான் இருக்கும் - - - நில அபகரிப்புக்கு - ஒரு மாற்று வழியை கையாள்கிறார்கள் போலிருக்கு . . .


Natarajan Ramanathan
மார் 13, 2025 13:02

லோக்கல் திமுக ஆட்களை கஸ்டடியில் எடுத்து கிடுக்கிப்பிடி விசாரணை செய்தால் உண்மை தெரியும்.


தமிழ்வேள்
மார் 13, 2025 12:54

லோக்கல் திமுக கிளை, வட்டம் வகையறாக்களை அணுஅணுவாக சித்திரவதை செய்து விசாரித்தால், கடந்தகால குற்றங்கள் முதல் , எதிர்காலத்தில் நடக்கப்போகும் குற்றங்கள் வரை அனைத்துக்கும் துப்பு தன்னால் கிடைக்கும் ....கட்டுமரத்துக்கு ஓட்டுபோட்ட பாவத்துக்கு நல்லா அனுபவிங்க டுமீளர்களே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை