உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜி ஓட்டு போடாத தேர்தல்: தி.மு.க.,வினர் சோகம்

செந்தில் பாலாஜி ஓட்டு போடாத தேர்தல்: தி.மு.க.,வினர் சோகம்

கரூர் : கடந்த, 28 ஆண்டுகளில் மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி ஓட்டு போடாத தேர்தலாக, நேற்று நடந்த லோக்சபா தேர்தல் அமைந்தது.கரூர் மாவட்டம், ராமேஸ்வரபட்டியை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 48; கடந்த, 1996, 2001 கரூர் பஞ்., யூனியன் கவுன்சிலராக வெற்றி பெற்றவர். பிறகு, 2006ல் அ.தி.மு.க., சார்பில், கரூர் சட்டசபை தொகுதியில் முதல் முறையாக வெற்றி பெற்றார். 2011ல் மீண்டும் அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்று, ஜெ., அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.கடந்த, 2016ல் கரூர் தொகுதியில் போட்டியிட, செந்தில் பாலாஜிக்கு சீட் வழங்காமல், அரவக்குறிச்சி தொகுதியில், ஜெ., சீட் வழங்கினார். அந்த தேர்தல் பணம் பட்டுவாடா காரணமாக நிறுத்தப்பட்டது. பிறகு நடந்த தேர்தலில், அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி, ஜெ., மறைவுக்கு பிறகு, தினகரன் அணிக்கு தாவியதால், எம்.எல்.ஏ., பதவியை இழந்தார்.இதனால், தி.மு.க., வுக்கு தாவிய செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் கடந்த, 2019ல் வெற்றி பெற்றார். கடந்த சட்டசபை தேர்தலில், கரூர் தொகுதியில் தி.மு.க.,வில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி மின்துறை அமைச்சராக இருந்தார்.பின்னர் கடந்தாண்டு ஜூன், 14ல் சட்ட விரோத பணம் பரிமாற்ற வழக்கில், அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி, சிறையில் உள்ளதால், நேற்று நடந்த லோக்சபா தேர்தலில் ஓட்டு போடவில்லை. கடந்த, 1996 முதல் 2021 வரை நடந்த அனைத்து தேர்தல்களிலும், செந்தில் பாலாஜி அவரது சொந்த ஊரான, ராமேஸ்வரபட்டி புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், காலையில் முதல் ஆளாக, குடும்பத்துடன் சென்று ஓட்டு போடுவது வழக்கம். ஆனால் கடந்த, 28 ஆண்டுகளில் நேற்று நடந்த லோக்சபா தேர்தலில், முதன் முறையாக செந்தில் பாலாஜி ஓட்டு போடாததால், தி.மு.க.,வினர் சோகத்தில் காணப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

R Kay
ஏப் 20, 2024 14:04

ரொம்ப முக்கியம் ஊழல் பேர்வழிகளுக்கு தரப்படும் முக்கியத்துவம் குறைய வேண்டும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கொடுத்து ஏமாந்தவர்கள் சாபம் சும்மா விடாது வேலைக்காக குறுக்குவழியை தேர்ந்தெடுத்தவர்கள் நல்ல பாடம் கற்றுக்கொண்டிருப்பார்கள்


ram
ஏப் 20, 2024 09:34

ரொம்ப முக்கியமான செய்திதான்..


raja
ஏப் 20, 2024 09:09

சந்தோசமா இருக்கு


Jayaraman Rangapathy
ஏப் 20, 2024 08:44

ரொம்ப முக்கியம்


Kasimani Baskaran
ஏப் 20, 2024 07:59

சரித்திரத்தில் முதல்முறையாக ஒருவர் சிறையிலிருந்து கொண்டே தேர்தல் பணிகளை செய்தது தீம்கா சரித்திரத்தில் இதுதான் முதல் முறை தேர்தல் ஆணையத்தையும் சிறைத்துறையையும் இதற்காக ஜனாதிபதி விருதுக்கே கூட பரிந்துரைக்கலாம் சட்ட திட்டங்களை கேலிக்கூத்தாக்குவதில் தீம்காவை மிஞ்ச காங்கிரசைத்தவிர வேறு ஒரு கட்சியும் போட்டியில் இல்லை


Ramu, Cbe
ஏப் 20, 2024 07:14

நீதியின் விபரீதம்.....


sri
ஏப் 20, 2024 08:36

சுதந்திர போராட்ட தியாகி


லெங்காராம்
ஏப் 20, 2024 07:13

பெரிய செய்தி பாருங்க இது ...


J.V. Iyer
ஏப் 20, 2024 06:22

இந்த கள்ளன் ஒரு வோட்டு போடாததினால் ஒரு லட்சம் பேர் பாஜகவிற்கு போடவிடாமல் செய்தனர் என்று அண்ணாமலைஜி சொல்கிறாரே


Mani . V
ஏப் 20, 2024 05:19

அவரை தபால் ஓட்டுப் போட அனுமதித்து இருக்கலாம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை