உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமும் அம்மன்...5: சாதிக்க...

தினமும் அம்மன்...5: சாதிக்க...

சாதிக்க வேண்டும் என நினைப்பவரா... திருச்சி சமயபுரம் மாரியம்மனை தரிசியுங்கள். வைஷ்ணவி என்ற மாரியம்மனின் சிலை திருச்சி ஸ்ரீரங்கத்தில் முன்பு இருந்தது. அதன் உக்கிரத்தை தாங்க முடியாததால் அதை வேறிடத்திற்கு எடுத்துச் சென்றனர். எடுத்துச் செல்லும் போது ஓரிடத்தில் இளைப்பாறினர். அந்த இடமே 'இனாம் சமயபுரம்'. பின்னர் அதை தற்போது கோயில் உள்ள கண்ணனுார் அரண்மனை மேட்டில் வைத்தனர். அப்பகுதியில் வசித்த மக்கள் இவளை 'கண்ணனுார் மாரியம்மன்' என அழைத்தனர். இச்சமயத்தில் விஜயநகர மன்னர் இங்கு வழிபட்டு போரில் வென்றதால் கோயிலைக் கட்டினார். இங்கு வேண்டினால் ஆப்பரேஷன் செய்யாமலேயே நோய் குணமாகும். இங்கு மொட்டை அடித்தல், தீச்சட்டி எடுத்தல், மாவிளக்கு நேர்த்திக்கடன் செய்கின்றனர். எப்படி செல்வதுதிருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 15 கி.மீ.,நேரம் அதிகாலை 5:30 - இரவு 8:30 மணிதொடர்புக்கு 0431 - 207 0460, 267 0460


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை