உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆந்திராவில் தேர்வு மையம் டாக்டர்கள் எதிர்ப்பு

ஆந்திராவில் தேர்வு மையம் டாக்டர்கள் எதிர்ப்பு

சென்னை:நாடு முழுதும் உள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, நீட் தேர்வை, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் நடத்துகிறது. அதன்படி, எம்.டி., - எம்.எஸ்., முதுநிலை படிப்புகளுக்கு, 2024 - 25ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு, வரும் 11ம் தேதி நடக்க உள்ளது. இதில், தமிழகத்தில் இருந்து 25,000 டாக்டர்கள் உட்பட, நாடு முழுதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத உள்ளர்.இரண்டு ஷிப்டுகளாக நடைபெறும் நீட் தேர்வில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களை தேர்வு செய்தவர்களுக்கு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மையம் ஒதுக்கப் பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டாக்டர்கள் வீடியோ பதிவிட்டு, சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி