உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிவகங்கையில் வெடிபொருட்கள் வெடித்து சிதறிய ஓட்டு வீடு

சிவகங்கையில் வெடிபொருட்கள் வெடித்து சிதறிய ஓட்டு வீடு

சிவகங்கை: சிவகங்கை அருகே வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களை சேகரித்து வைத்திருந்த தோட்டத்து வீடு திடீரென வெடித்துச்சிதறியது. அவற்றை பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் வி.ஏ.ஓ., சதீஷ்குமார். இவர் நேற்று முன்தினம் உதவியாளர் அழகுபாண்டியுடன் காஞ்சிரங்கால் மற்றும் அரசேனரி கீழமேடு பகுதியில் ரோந்து சென்றார். அப்பகுதியில் வசிப்பவர்கள் சேகர் என்பவரது தோப்பில் பெரும் வெடி சத்தம் கேட்டதாக கூறினர். அங்கு சென்ற போது தோப்பில் இருந்த ஓட்டு வீடு சேதம் அடைந்து சுவற்றில் பெரிய துளை ஏற்பட்டிருந்தது. அரசனேரி கீழமேட்டை சேர்ந்த சேகர் மகன் அரவிந்த் 30, தன் பாதுகாப்பிற்காக வைத்திருந்த வெடிமருந்து வெடித்து சிதறியதாக தெரிவித்தார். இதுதொடர்பாக சிவகங்கை போலீசார் வழக்கு பதிந்து அரவிந்த்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை