மேலும் செய்திகள்
குடியரசு தின டில்லி அணிவகுப்பு: தமிழக ஊர்திக்கு அனுமதி
12 minutes ago
மின்சார வாகனங்களுக்கு வரி விலக்கு நீட்டிப்பு
14 minutes ago
ரேஷன் கார்டு விண்ணப்பம்; 1.71 லட்சம் நிலுவை
18 minutes ago
ஈரோடு:ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய தேசியக் கொடியானது அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில், ஈரோடு கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை, கிளை அஞ்சலகங்களிலும் விற்பனைக்கு உள்ளது. ஒரு கொடி, 25 ரூபாய். பொதுமக்கள், அவரவர் வீடுகளுக்கு அருகே உள்ள அஞ்சலகங்களில், 25 ரூபாய் செலுத்தி தேசியக் கொடியை பெறலாம்.தவிர, https:/www.epostoffice.gov.inஎன்ற இணையதள முகவரியை பயன்படுத்தி, ஆன்லைன் வாயிலாக பதிவு செய்து, தபால்காரர் வாயிலாக தங்கள் வீட்டுக்கே பட்டுவாடா செய்யும் வசதி உள்ளது. அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் மொத்தமாக தேசியக் கொடியை வாங்க விரும்பினால், ஈரோடு கோட்டத்தில் உள்ள ஈரோடு, பவானி, கோபி ஆகிய தலைமை அஞ்சலகங்களில் தொடர்பு கொண்டு பெறலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
12 minutes ago
14 minutes ago
18 minutes ago