வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ராவணா, உண்மையைச் சொல். எட்டுக் கோடி அளவுக்கான சரக்கா வைத்து இருந்தாய்? ஓ இன்சூரன்சு கிளைம்மா? நடக்கட்டும், நடக்கட்டும்.
மேலும் செய்திகள்
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு: முழு விபரம் இதோ!
8 hour(s) ago | 2
ஈரோடு:ஈரோடு, வீரப்பன்சத்திரம், சாந்தாங்காட்டை சேர்ந்தவர் ராவணன், 55. இவருக்கு சொந்தமான பைப்ஸ் மற்றும் டியூப்ஸ் கடை, ஈரோட்டில் சத்தி சாலையில் உள்ளது. இங்கு, 10க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். முன்புறம் கடை, அதையொட்டி பின்புறம் கிடங்கு செயல்படுகிறது.நேற்று காலை, 10:40 மணியளவில் கிடங்கு திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ வேகமாக பரவியது. ஈரோடு, பவானி, மொடக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக அருகிலுள்ள கடைகளுக்கு தீ பரவவில்லை.ஆனாலும், கடையில் இருந்த பொருட்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. சேத மதிப்பு, 8 கோடி ரூபாய் இருக்கலாம் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராவணா, உண்மையைச் சொல். எட்டுக் கோடி அளவுக்கான சரக்கா வைத்து இருந்தாய்? ஓ இன்சூரன்சு கிளைம்மா? நடக்கட்டும், நடக்கட்டும்.
8 hour(s) ago | 2