உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில் வரும்... டிரைவர் வர மாட்டார்...! சென்னை மெட்ரோவில் வருது சூப்பர் சர்ப்ரைஸ்

ரயில் வரும்... டிரைவர் வர மாட்டார்...! சென்னை மெட்ரோவில் வருது சூப்பர் சர்ப்ரைஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

புறநகர் ரயில்

தலைநகர் சென்னையில் போக்குவரத்துக்கு எவ்வளவோ வசதிகள் இருந்தாலும் புறநகர் ரயில் சேவையின் தேவை, மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் தினசரி தேவைக்காக புறநகர் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

2ம் கட்ட மெட்ரோ ரயில்

நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் சூழலில் மெட்ரோ ரயில் பெரும் வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. இந் நிலையில் விரைவில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் டிரைவர் இல்லாத ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதற்காக மொத்தம் 62 ரயில்கள் தயாரிக்கும் பணிகள் ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் மும்முரமாக நடந்து வருகிறது.

ஆளில்லா ரயில்

அதன் அடுத்த கட்டமாக, 3 பெட்டிகளுடன் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் அடுத்த மாதம் சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் மெட்ரோ ரயில் சேவையில் 2ம் கட்ட வழித்தடத்தில் டிரைவர் இல்லாமல் இயங்கும் வகையில் 3 பெட்டிகளுடன் கூடிய முதல் ரயில் தயாராகி உள்ளது.

1000 பேர் பயணிக்கலாம்

பூந்தமல்லியில் உள்ள பணிமனைக்கு அடுத்த மாதம் இந்த ரயில் கொண்டுவரப்பபட உள்ளது. பின்னர், மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். இந்த ரயில் பெட்டிகள் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்டவை. மணிக்கு 80 கி.மீ.வேகத்தில் செல்லும் திறனுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 1000 பேர் வரை தாராளமாக பயணம் செய்யலாம்.இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Krish
ஆக 20, 2024 16:10

சமூக நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீட்டை உறுதி செய்யுங்க: ஸ்டாலின் வலியுறுத்தல் எங்கே????????????????


Krish
ஆக 20, 2024 16:08

வளர்ச்சி சரிதான் இதனால் நான்கு பேரின் வேலை பறிபோனது...


visu
ஆக 20, 2024 17:18

மக்கள் தொகையை குறையுங்கள் ஒருவருக்கு அரசு வேலை பலன்கள் வழங்க வேண்டும் என்றால் 900 பேரை கசக்கி பிழிந்து வரிவசூலித்துதான் வழங்க முடியும் .அரசின் செலவுகளை குறைத்தால்தான் மக்களுக்கு சிறந்த சேவையை தர முடியும்


Ramesh Sargam
ஆக 20, 2024 12:06

பல வளர்ந்த நாடுகளில், சீனா உட்பட, டிரைவர் இல்லாத ரயில், டிரைவர் இல்லாத டாக்ஸி, என்று எப்போதோ வளர்ச்சியை அடைந்திருக்கிறார்கள். இந்தியாவில் மிக மெதுவான வளர்ச்சி.


ganapathy
ஆக 20, 2024 11:35

துபாய்ல இந்த ஆளில்லா மெட்ரோ பெரும் வெற்றி. ஆனா இங்க இருக்குற திமுக துலுக்க கும்பலுக்கு கல்லெறிய இன்னொரு ஒரு டார்கெட் இது.


Raj Kamal
ஆக 20, 2024 12:10

உன்ன மாதிரி போகிறபோக்கில் எதாவது இம்மாதிரி உளறிக்கொட்டுவதால் தான் சமூகத்தில் சாதாரண மக்கள் பெரும் துன்பத்தில் தவிக்கின்றனர்.


ganapathy
ஆக 20, 2024 11:31

நம்மளுக்கு எதுக்கு விஞ்ஞான முன்னேற்றம்? இதுலயும் இட ஒதுக்கீடு சமூகநீதின்னு எல்லா வெங்காயத்தையும் உன்னோட உளுத்தம்பருப்புகளுக்காக கேளு


மேலும் செய்திகள்









புதிய வீடியோ