உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக எம்பிக்கள் கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றம்

திமுக எம்பிக்கள் கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தமிழகத்தின் திட்டங்கள் , உரிமைகளுக்கு தொடர்ந்து அயராது குரல் கொடுப்போம் என்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

5 தீர்மானங்கள்

தமிழகத்தின் திட்டங்கள்,உரிமைகளுக்கு தொடர்ந்து அயராது குரல் கொடுப்பது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9fgb4fjq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜூன் 14 ல் கோவையில் முப்பெரும் விழா நடத்தப்படும். நிதி உரிமை மற்றும் மொழி உரிமை குறித்து பார்லி.யில் திமுக எம்.பி.க்கள் குரல் எழுப்புவோம்.பார்லிமென்ட் வளாகத்தில் அகற்றப்பட்ட தலைவர்களின் சிலைகளை அதே இடத்தில் வைக்க வேண்டும்.நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி. நீட் தேர்வு வேண்டாம் என கூறும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சந்திரபாபு மற்றும் நிதிஷ்குமார் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் ஆகிய ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது: ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பா.ஜ.,பெறவில்லை, பலவீனமான பா.ஜ. அரசை நமது முழக்கம் மூலம் பா,ஜ.,வை செயல்பட வைக்க வேண்டும். அந்த கடமை உங்களுக்கு உள்ளது. பாஜவிற்கு சரிசமாக இந்தியா கூட்டணி எம்பிக்கள் இருக்கப் போகிறார்கள். பார்லியை ஆக்கபூர்வமான விவாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள். தமிழ்நாட்டிற்கும் எனக்கும் திமுக எம்.பி்க்கள் பெருமையை சேர்க்க வேண்டும். வெற்றியை பெற்று தந்த மக்களுக்கு திமுக எம்பி்க்கள் உண்மையாக இருக்க வேண்டும். தொகுதி மக்களை சந்திக்க எம்.பிக்கள் நேரம் ஒதுக்க வேண்டும். ஒரு சில மாநில தேர்தல் முடிவுகள் மாறி இருந்தால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ளதால் மக்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள் என்ற எச்சரிக்கையுடன் திமுக எம்.பிக்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

இராம தாசன்
ஜூன் 11, 2024 01:19

//ஜூன் 14 ல் கோவையில் முப்பெரும் விழா நடத்தப்படும்// இதுக்காகவே உங்களை தேர்ந்து எடுத்திருக்காங்க .


Ashanmugam
ஜூன் 09, 2024 16:56

40/40 க்கு ஜெய்யித்த திமுக எம்பிகள் திமிர், அகம்பாவம், பிடித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள். இவர்களுக்கு தெரிந்தது நாடாளுமன்றத்தில் ரகளை, சண்டை சச்சரவு, அமளி துமளி அராஜகம் வெளி நடப்பு என மக்களின் வரி பணத்தை வீணாக்கி நாடாளுமன்றத்தை செயல்படாமல் ஸ்தம்பிக்க செய்வார்கள்.


Ashanmugam
ஜூன் 09, 2024 16:50

தமிழகத்தில் லஞ்சம் கறை புரண்டு ஓடுகிறது. இதை ஒழிக்க ஏன் தீர்மானம் இல்லை? அறிவு ஆற்றலுக்கு சவாலாக உள்ள நீட் தேர்வை ஒழிக்க துடியாய் துடிக்கும் திமுக, குடியால் இதுவரைக்கும் லட்சோப குடும்பங்கள் அழிந்து விட்டன. இதை ஒழிக்க ஏன் தீர்மானம் இல்லை. இன்று தமிழகத்தில் பஞ்சாயத்து, வி ஏ ஓ அலுவலங்களில் வீட்டு பட்டாவுக்கு ரூ 10000லஞ்சம் இல்லாமல் வாங்க முடியல. இதை ஒழிக்க ஏன் தீர்மானம் இல்லை?தமிழகத்தில் விஷம் போல் ஏறி வரும் விலைவாசி உயர்வை தடுக்க ஏன் தீர்மானம் இல்லை? ஆக தமிழகத்திற்கு கோடி கோடியாய் கொள்ளை அடிக்கும் துறைக்கு எல்லாம் கண்டு கொள்வது. தமிழக மக்களுக்கு எழுந்தது அதை எல்லாம் லஞ்சம் மூலமாக சீர் அழிப்பது இதான் விடியல் அரசின் போதனை?


ஆரூர் ரங்
ஜூன் 09, 2024 10:20

டாஸ்மாக் மூடலுக்கான முதல் கையெழுத்தை உடனே போட வலியுறுத்தி தீர்மானம் போடாம என்ன பயன்?இளம் விதவைகள் அதிகரிக்க விடலாமோ?


இராம தாசன்
ஜூன் 11, 2024 21:05

அது மாநில தேர்தலில் சொல்வோம் ஆனால் செய்ய மாட்டோம்..


தமிழ்வேள்
ஜூன் 09, 2024 10:02

கல்வி போலீஸ் இரண்டு துறைகளையும் மத்திய பட்டியலில் இணைக்க வேண்டும்...நீட் தேர்வு விலக்கு கோரும் மாநில டாக்டர்கள் வேறு மாநிலங்களில் பிராக்டீஸ் செய்ய தடை வேண்டும். சிறப்பு நீட் தேர்வு வைத்து அதில் பாஸ் ஆனால் மட்டுமே மற்ற மாநிலங்களில் பிராக்டீஸ் செய்யவும் மத்திய அரசு மருத்துவ சேவை அல்லது மருத்துவ ஆசிரியர் பணியில் சேர இயலும் என்று சட்டம் கொண்டு வந்தால், திருட்டு திராவிடம் ஓடிப்போய் விடும்..


Muthu Kumaran
ஜூன் 09, 2024 09:01

தீர்மானம் போட்டாச்சு, வரலாறு பேசும், இன்ப நிதிக்கு வசதியா இருக்கும். அவரவர் கொள்ளையடிக்கும் வேலை பாருங்கள்


Anbuselvan
ஜூன் 09, 2024 00:56

தம்படிக்கு பேருமா?


krishna
ஜூன் 08, 2024 23:43

SARVAADHIKARI NALLA PAARUNGA.IDHUDHAAN PARLIAMENT LAYOUT.NERA PONA CANTEEN.ANGUDHAAN ADUTHA 5 VARUSHAM NAAMA KADUMAYAA UXHAIKKANUM MP BALATHA KURALIL YES BOSS


R.MURALIKRISHNAN
ஜூன் 08, 2024 23:18

கருணாநிதியின் சிலையை கூவத்தின் நடுவில் வைக்கவும்


R.MURALIKRISHNAN
ஜூன் 08, 2024 23:17

மொத்தத்தில் உருப்படியான செயல் எதுவும் செய்ய மாட்டீர்கள். தமிழை வைத்து பணம் ஆட்டய போட மட்டும் திமுகவுக்கு தெரியும்.


மேலும் செய்திகள்