உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., கூட்டணிக்கு வர முயற்சி அண்ணாமலை மீது மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு

அ.தி.மு.க., கூட்டணிக்கு வர முயற்சி அண்ணாமலை மீது மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அளித்த பேட்டி: லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மற்றும் அனுபவத்தினால் மீண்டும் அ.தி.மு.க., கூட்டணிக்கு வர பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை முயற்சி செய்கிறார். பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெள்ளத் தெளிவாக தெரிவித்துவிட்டார். அதன் பின், அ.தி.மு.க., கூட்டணி பற்றி அண்ணாமலை பேச வேண்டிய அவசியம் இல்லை. இருந்தபோதிலும், கொல்லைப்புறமாக அ.தி.மு.க., கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கள்ளச்சாராய சாவு, போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது.போதை பொருட்களை தி.மு.க.,வினரே கடத்தும் நிலை இருக்கும்போது, போதை ஒழிப்பு உறுதி மொழியை எடுத்துள்ளனர். அதை கேலிக்கூத்தாக தான் மக்கள் பார்ப்பர். 2026 சட்டசபை தேர்தலை பொருத்தவரை அ.தி.மு.க.,வா, தி.மு.க.,வா என்பதே மக்களுக்கான சாய்ஸ். இரு கட்சிகளின் கூட்டணியில் எதை தேர்வு செய்வது என்பது குறித்துத்தான் மக்கள் யோசிப்பர். அ.தி.மு.க., கூட்டணியே இல்லாமல் தனித்து நின்றாலும் வெற்றி பெறும். சட்டசபை தேர்தல் வரும்போது, தி.மு.க., கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் அ.தி.மு.க.,வுடன் கூட்டணியாக வர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ