உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிதி நிறுவனத்தில் வாகன கடன் பெற்று ரூ.17 லட்சம் மோசடி; பங்குதாரர் உட்பட 3 பேர் கைது

நிதி நிறுவனத்தில் வாகன கடன் பெற்று ரூ.17 லட்சம் மோசடி; பங்குதாரர் உட்பட 3 பேர் கைது

தேனி : தேனியில் நிதி நிறுவனத்தில் வாகன கடன் பெற்று ரூ.17 லட்சம் முறைகேடு செய்த வழக்கில், டிராக்டர் நிறுவன பங்குதாரர் சந்திரமோகன், மேலாளர் பாலமுருகன், பணியாளர் மதன் ஆகிய மூவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்தவர் வசந்த் 42. தனியார் நிதி நிறுவன கிளை மேலாளர்.இவர் தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தேனி முத்துத்தேவன் பட்டியில் தனியார் டிராக்டர் நிறுவனம் உள்ளது. அங்கு வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்த 3 டிராக்டர்களுக்கு ரூ.17 லட்சத்து 79 ஆயிரத்து 942 வாகனக்கடன் பெற்றிருந்தனர். அதற்கான தவணைத் தொகை செலுத்தாதது குறித்து கேட்கச் சென்றபோது நிறுவனத்தின் பங்குதாரர்கள், டிராக்டர்கள் வாங்கியவர்கள் டிராக்டர்களை மறைத்து வைத்து, தவணைத் தொகை செலுத்தாமல் டிராக்டர்களை முறையாக பதிவு செய்து ஆவணத்தை நிதிநிறுவனத்தில் ஒப்படைக்காமல் மோசடி செய்திருந்தனர். அவர்களிடம் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர். நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார்.மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.இதன்படி விசாரணை முடிந்து டிராக்டர் விற்பனை செய்த நிறுவனம், அதன் உரிமையாளர் கார்த்திக், பங்குதாரர் சந்திரமோகன், மேலாளர் பாலமுருகன், பணியாளர்கள் சரண்யா, ராஜாங்கம், மதன், செல்வம், ராஜபாண்டி, செல்வேந்திரன்காமராஜ் உட்பட 10 பேர் மீது கடந்த ஏப்.,4ல் மோசடி வழக்குப் பதிவு செய்தனர்.இந்நிலையில் நேற்று பங்குதாரர் சந்திரமோகன், மேலாளர் பாலமுருகன், பணியாளர் மதன் உள்ளிட்ட மூவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை