உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கஞ்சா : ஒடிசா வாலிபர் உட்பட இருவர் கைது

கஞ்சா : ஒடிசா வாலிபர் உட்பட இருவர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 4 கிலோ கஞ்சா கடத்தியதாக ஒடிசா வாலிபர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.கேணிக்கரை எஸ்.ஐ., தினேஷ்பாபு, பயிற்சி எஸ்.ஐ., ராஜகுமாரன் மற்றும் போலீசார் தேவிப்பட்டினம் ரோட்டில் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிப்பதாக நின்ற இருவரை விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் அவர்களிடமிருந்த பார்சல்களை சோதனையிட்டனர்.அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. அதை 2 பேரும் கடத்தயிருந்தனர். விசாரணையில் ஒடிசா மாநிலம் அமிர்துலு கிராமத்தைச் சேர்ந்த கோலக் பிகாரி பாலா 23, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் கோட்டூர் கீழவீதி மாரிமுத்து மகன் வெங்கடேசன் 24, என தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை