உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாமலை படத்தை அணிவித்து ஆட்டை வெட்டிய விவகாரம்: ஐகோர்ட்டில் போலீஸ் அறிக்கை

அண்ணாமலை படத்தை அணிவித்து ஆட்டை வெட்டிய விவகாரம்: ஐகோர்ட்டில் போலீஸ் அறிக்கை

சென்னை: பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் படத்தை அணிவித்து, ஆட்டை வெட்டிய விவகாரம் தொடர்பாக, மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்துள்ளனர்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கோவை லோக்சபா தொகுதியில் தோற்றதை தொடர்ந்து, கிருஷ்ணகிரி அருகே சிலர் ஆட்டுக்கு அண்ணாமலை படத்தை அணிவித்து, அதை வெட்டினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. பா.ஜ., சார்பில், டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.இந்த விவகாரத்தில் நடவடிக்கை கோரி, வழக்கறிஞர் மோகன்தாஸ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆஜராகி, ''இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து, போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை போலீசார் தெரிவிக்க வேண்டும்,'' என்றார். அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.,யின் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், 'இந்த விவகாரம் தொடர்பாக, சிவபிரகாசம் என்பவர் அளித்த புகார் அடிப்படையில், பாரத், ஆசைத்தம்பி, ராமன் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புலன் விசாரணை நடந்து வருகிறது. விரைவில் விசாரணையை முடித்து, நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என்று கூறப்பட்டுள்ளது. இதை பதிவு செய்த முதல் பெஞ்ச், வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Sampath Kumar
ஆக 21, 2024 09:47

ஒரிஜினல் ஆட்டை தானே


நிக்கோல்தாம்சன்
ஆக 24, 2024 08:55

பொதுமக்களின் உணவினை நாகரீகம்... இல்லாமல் மீண்டும் போட்ட என்ன தண்டனை கொடுக்கமுடியும் சார்


pmsamy
ஆக 21, 2024 09:09

அண்ணாமலை நீ பலியாடா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா


நிக்கோல்தாம்சன்
ஆக 21, 2024 08:50

இந்த ஆட்சியில் ஆடு போல தாடி வைத்து அலையும் மர்ம நபர்களும் , அவர்கள் போடும் பாலைவன ஆட்டமும் காண சகிக்கவில்லை


அஞ்சனன்
ஆக 21, 2024 08:46

க்கூமுட்டைகள்..


karthik
ஆக 21, 2024 08:33

சவுக்கு சங்கர், மற்றும் அஸ்வத்தாமன் ஏதாச்சும் வாய் வார்த்தையில் பேசினால் சட்டம் ஒழுங்கு கெடும் இரு தரப்பினருக்கிடையே மோதல் உருவாகும்.. ஆனால் இந்தியாவின் மிகப்பெரிய கட்சியின் மாநில தலைமையின் புகைப்படத்தை ஆட்டின் மீது மாட்டிவித்து பகிரங்கமாக தெளிவாக தெரியும் படி புரியும் படி வெட்டினால் எந்த பிரச்னையும் வராது..


Barakat Ali
ஆக 21, 2024 08:26

அதைச் செய்ததுடன் நிறுத்தவில்லை ...... சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோவைப் பகிர்ந்து பெருமைப்பட்டுக் கொண்டார்கள் ..... அவரை பெண்ணாகவும், டிரான்ஸ்ஜெண்டராகவும் சித்தரித்து குரூர மகிழ்ச்சி அடைகிறார்கள் ....... இருபத்தொண்ணாம் பக்கத்துக்காரர்களின் அநாகரிகம் குறித்து அறிந்தாலும் மக்கள் அவர்களையே ஆதரிக்கிறார்கள் ....


RAMAKRISHNAN NATESAN
ஆக 21, 2024 09:29

கரெக்ட்டு ...... நீயி எங்களைப் பொறுத்தவரை கொசுவுக்குச் சமம் ன்னு சொல்லிக்கிட்டே பயந்து நடுங்கறாங்க ..... கரைவேட்டியை நின்னுக்கிட்டே நனைக்கிறாங்க ..... அதே போல குஷ்புவையும் சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக குறிப்பிடுகிறார்கள் ..... ஒரு காலத்தில் நமது கட்சியில் இருந்தவாச்சே என்கிற மரியாதை கூட இல்லை ......


Kumar Kumzi
ஆக 21, 2024 08:01

படிப்பறிவற்ற ரவுடிகளின் கூடாரம் தான் திருட்டு திராவிஸ தீயசக்தி திமுக


N.Purushothaman
ஆக 21, 2024 07:15

ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரியை இந்த அளவிற்கு காட்டுமிராண்டித்தனமா சித்தரித்து தங்களின் கொலைவெறி புத்தியை காட்டி இருக்கானுங்க ...அப்படிப்பட்டவனுங்களை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்ப்பது மகா கேவலம் ...நாளை இது மற்ற காவலர்களுக்கு கூட இது நேரலாம் ....


S R Rajesh
ஆக 21, 2024 10:35

அரசியல் என்கிற சாக்கடையில் இறங்கிவிட்டால், அங்கே முன்னாள் பின்னாள் காவல்துறை அதிகாரி என்கிற பேச்சுக்கு இடமில்லை. எல்லாமே சாக்கடைகள் தான்.


nsathasivan
ஆக 21, 2024 07:03

பப்ளிக் ஆக நடந்த இந்த சம்பவத்தை கோர்ட்டுக்கு எடுத்துச்சென்ற தால் தான் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இல்லையெனில் ஒரு நடவடிக்கையும் இல்லை தானே.


Duruvesan
ஆக 21, 2024 06:54

இதேகண்டி விடியல் சாரை பத்தி ட்வீட் போட்டா நாங்க சார்ட்டட் flight வெச்சினு வந்து புடிச்சி குண்டாஸ்ல போட்டு இருப்போம். திராவிட மாடல் வாழ்க


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை