உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நல்லதே நடக்கும்; வெற்றி நிச்சயம்; கட்சி கொடியேற்றிய விஜய் நம்பிக்கை!

நல்லதே நடக்கும்; வெற்றி நிச்சயம்; கட்சி கொடியேற்றிய விஜய் நம்பிக்கை!

சென்னை: நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் என கட்சி கொடியேற்றி தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் பேசினார்.தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய், சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று அறிமுகம் செய்தார். பின்னர் விஜய் பேசியதாவது: எல்லோருக்கும் வணக்கம். இன்று நம்ம எல்லோருக்கும் மிகவும் சந்தோஷமான நாள். நான் வந்து என்னுடைய அரசியல் பயணத்தை துவங்கி, அதற்கு ஒரு துவக்க புள்ளியாக நமது கட்சி பெயரை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தேன். அன்றைய தினத்தில் இருந்து பார்த்தால், ஒரு குறிப்பிட்ட நாட்களுக்காக நீங்க எல்லாரும் காத்து கொண்டு இருக்கிறீர்கள் என்று எனக்கு நன்றாக தெரிந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1sl0tggq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

கொடி அறிமுகம்

நமது முதல் மாநாடு நடத்த, அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது. என்னைக்கு, எப்போது என்று உங்களுக்கு கூடிய விரைவில் அறிவித்துவிடுவேன். அதற்கு முன்னதாக நீங்க எல்லாரும் கொண்டாடி மகிழ்வதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை இன்று அறிமுகப்படுத்தி இருக்கிறேன். என் நெஞ்சில் குடியிருக்கும் எனது தோழர்களாகிய, உங்கள் முன்னாடியும், எனது நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் முன்னாடியும், கொடியை அறிமுகப்படுத்தியது மிகவும் பெருமையாக உள்ளது.

ஒற்றுமையாக உழைப்போம்

இதுவரைக்கும் நமக்காக உழைத்தோம். இனி வருங்காலங்களில், நம்மை ஒரு கட்சி ரீதியாக தயார் படுத்தி கொண்டு தமிழகத்திற்காகவும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும், நம்ம எல்லாரும் சேர்த்து உழைப்போம். புயலுக்கு பிறகு அமைதி, ஆர்ப்பரிப்பு இருப்பது போல, நமது கொடிக்கு பின்னாடியும் ஒரு வரலாற்று குறிப்பு உள்ளது. நம்முடைய கொள்கைகள் என்ன? நமது செயல்திட்டங்கள் என்ன? என்று சொல்லும் போது, அன்றைக்கு கொடிக்கு பின்னாடி உள்ள விளக்கத்தையும் சொல்வேன்.

கட்சி கொடி ஏற்றுங்கள்!

அதுவரைக்கும் ஒரு சந்தோஷமாக, ஒரு கெத்தாக நம்ம கட்சி கொடியை ஏற்றி கொண்டாடுவோம். கட்சி கொடியாக மட்டும் பார்க்கவில்லை. தமிழகத்தோட வருங்கால தலைமுறைக்கான வெற்றி கொடியாக பார்க்கிறேன். கட்சி கொடியை உங்க இல்லத்துல, உள்ளத்துல, நான் சொல்லாமலே ஏற்றுவீங்க என்று தெரியும். இருந்தாலும் முறையான அனுமதி வாங்கிட்டு, அந்த ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன் எல்லாம் பாலோ செய்து விட்டு, அனைவரிடமும் தோழமையை பாராட்டி நமது கட்சி கொடியை ஏற்றி கொண்டாடுவோம். நம்பிக்கையாக இருங்கள். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி. வணக்கம். இவ்வாறு விஜய் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

God yes Godyes
ஆக 22, 2024 21:08

தம்பி ஜாதகத்தில் குரு ஆறில் மறைவு.ஆட்சிக்காரகன் சூரியனுடன் சனி சூரியனது விரோத புத்திரன்.ஆட்சி பிடிப்பது குதிரை கொம்பு. யானைகள் குருவின் அம்சம்.யானைகள் உள்ள கொடியை மாற்ற வேண்டும்.


God yes Godyes
ஆக 22, 2024 20:19

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் மகன் கிறித்துவ ஆட்சி புட்டுகிச்சி.அதே மாதிரி நம்ம நாட்லையும் நடந்தாக்கா கவுத்துக்கும்.


Ramesh Sargam
ஆக 22, 2024 19:58

இனி கேட்கவேண்டாம், தமிழகம் முழுவதும் விஜய் கட்சி கொடி பறக்கும். தமிழகத்துக்கே மஞ்சள்காமாலை நோய் வந்ததுபோல் காணப்படும்.


Rajah
ஆக 22, 2024 16:39

கூத்தாடிகள் இல்லாத கட்சிகள் எது ? வருபவர்கள் வந்து விட்டுப் போகட்டுமே. ஏன் நாம் வீணாக அலட்டிக் கொள்ள வேண்டும். மக்கள் விரும்பினால் தேர்ந்தெடுப்பார்கள் இலையில் நிராகரிப்பார்கள். நம்மை ஆண்ட பல கூத்தாடிகள் இதய தெய்வங்களாக இன்றும் போற்றப்படுகின்றார்கள். நமது குறிக்கோள் திராவிட கட்சிகளின் வீழ்ச்சியில்தான் இருக்க வேண்டும். இதை மனதில் வைத்து செயல் படுங்கள். யார் வேண்டுமானாலும் வந்து விட்டுப் போகட்டும். அந்த வருகை நமக்கு சாதகமாக அமைந்தால் அது நல்லதுதானே.


God yes Godyes
ஆக 22, 2024 16:30

தம்பி இனி சினிமா உனக்கு கட்டுபடியாகாது. எங்காவது பாண்டி பஜாரில் ஜவுளிக்கடை நடத்து.


Rajah
ஆக 22, 2024 16:26

நடிகர் சுரேஷ் கோபி விஜேபியில் இணைந்து கேரளாவில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை விஜேபிக்காக கொடுத்திருக்கின்றார். ஆகவே நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்ல ஜனநாயக நாட்டில் யாருக்கும் உரிமை இல்லை. திராவிடக் கட்சிகளின் அழிவுக்கு நடிகர் விஜயின் வருகை காரணமாக அமையும் என்றால் அதை நாம் ஆதரிக்க வேண்டும். வீழ்ச்சி காணப்போவது திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கி. இது நல்லதுதானே. புரிந்து கொண்டால் நல்லது. வீண் கருத்துக்களை தவிர்க்கவும்.


Mettai* Tamil
ஆக 22, 2024 16:22

ஊழல் , வாரிசு அரசியல் என்று எதிர்த்து ஒரு ரவுண்டு அரசியல் செய்து பணத்தால் மயங்கி திரும்ப ஊழலின் மடியிலே படுத்து விட்ட வை கோ , கமலஹாசனா இல்ல எதற்கும் பிடி கொடுக்காம எதார்த்தமா அரசியல் செய்து துரோகம் , சூழ்ச்சி யினால் வீழ்ந்த விஜயகாந்தா என்பதை காலம் தான் பதில் சொல்லும் ...........


என்றும் இந்தியன்
ஆக 22, 2024 16:12

டாஸ்மாக்நாடு வெட்டி கழகம் மிக மிக நல்ல பாதையில் செல்கின்றது. முதல் உதாரணம் இதோ : "தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை த.வெ.க கொடியில் பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது என்றும், உடனடியாக விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும், இல்லையென்றால் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு வழங்கப்பட்டு, வழக்கும் தொடுக்கப்படும் என்றும் பகுஜன்சமாஜ் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது".


Rajah
ஆக 22, 2024 16:11

இது ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். முடிவு மக்கள் கையில். தலைவர் அண்ணாமலை அவர்கள் "பிஜிபியோடு கூட்டணி வைக்க விஜே கட்சி விரும்பினால் வரவேற்போம்" என்று கூறியிருந்தார். திராவிட கட்சிகளை எதிர்ப்பதற்கு இது நல்லதென அண்ணாமலை அவர்கள் கருதுகின்றார். இதில் தவறில்லை. ஆகவே விஜேபி தொண்டர்கள் அண்ணாமலை அவர்களின் முடிவுக்கு எதிராக கருத்து வெளியிட வேண்டாம் என்று ஒரு விஜேபி தொண்டனாக கேட்டுக்கொள்கின்றேன். நன்றி


Anand
ஆக 22, 2024 16:09

கொடியில் இரண்டு யானைகள் டான்ஸ் ஆடுவது போல இருப்பது ஏன்? ஒருவேளை அல்லக்கை புஸ்ஸி இப்படித்தான் இருக்கவேண்டும் என ஆடி காட்டியிருப்பானோ என்னவோ.....


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை