உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு ஊழியர்கள் போராட்டம்; ஜூனுக்கு தள்ளிப்போட முடிவு

அரசு ஊழியர்கள் போராட்டம்; ஜூனுக்கு தள்ளிப்போட முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தேர்வு நேரம் என்பதால், அமைச்சர்களின் கோரிக்கையை ஏற்று, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் போராட்டத்தை, ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போட திட்டமிட்டு உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், சமீபத்தில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அடுத்தக்கட்ட போராட்டத்தை, இம்மாதம் நடத்த திட்டமிட்டுள்ளனர். சட்டசபை கூட்டம் முடியும் வரை போராட்டத்தை தள்ளிப்போட வேண்டும் என, அவர்களிடம் அமைச்சர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், போராட்டம் தொடர்பாக புதிய முடிவை, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் எடுத்துள்ளன. இதுகுறித்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறியதாவது:தேர்வு நேரம் என்பதால் போராட்டத்தை, ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போட திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால், பிரச்னையை ஆறப் போடவில்லை. பேச்சு நடத்திய அமைச்சர்கள் குழு நான்கு வாரம் அவகாசம் கேட்டுள்ளது. அதன்பின், அவர்களை மீண்டும் சந்தித்து பேசுவோம். என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை அறிந்து, அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்படும். தேர்வு நேரத்தில் போராட்டம் நடத்தினால், நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

J.Isaac
மார் 04, 2025 18:33

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் சங்கங்கள் தடை செய்யப்பட வேண்டும். அடுத்து, முக்கியமாக அவர்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்


Vijay D Ratnam
மார் 04, 2025 15:10

இன்ஜார்யா, கட்டுமர கம்பெனியின் அல்லக்கைங்களே போராட்டம் நடத்துறாய்ங்களாம். நம்பிட்டோம். திமுகவின் மகளிர் அணி, இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி போல திமுகவின் அரசு ஊழியர்கள் அணி இந்த ஜாக்டோ ஜியோ என்பது மக்களுக்கு தெரியும் பாஸ். சொம்மா டிராமா போடாதீங்கோ


Subburamu Krishnasamy
மார் 04, 2025 15:04

jacto geo is the government officials wing of DMK. The leaders are acting as saviour of government employees. Government officials strike will never succeed in Tamizhagam, because there is unity among the staffs of different departments. During ADMK regime, Agricultural departments not participated in the general strike


visu
மார் 04, 2025 14:14

தேர்தல் நெருக்கத்தில் பண்ணினா நல்ல லாபம் என நினைக்குறாங்க போல


S.L.Narasimman
மார் 04, 2025 13:43

அதிமுக ஆட்சியில் மாசமாசம் போராட்டம்ன்னு நடத்தினாங்க. இப்ப கட்சி பாசம் நாலு வருசமா போராட்டத்தை தள்ளி போடுராங்க.


aaruthirumalai
மார் 04, 2025 12:45

மக்கள் ஆதரவு உண்டா?


VIDHURAN
மார் 04, 2025 12:05

jacto jeo அமைப்பினை பற்றி திரு அண்ணாமலை அவர்கள் கூறியது 100/100 உண்மை இவர்களுக்கு பொழுது போகவில்லை என்றால் ஒரு பிரச்னையை வைத்து பாவப்பட்ட சில அரசு ஊழியர்களை நிர்பந்தப்படுத்தி போராட்டம் என்ற பெயரில் ஒரு நாடகம் போடுவார்கள். பாதி நாடகத்தை நிறுத்தி விட்டு அமைச்சர் உறுதி அளித்தார்/ பரீட்சை நேரம் என்றெல்லாம் காரணம் சொல்வார்கள். போராட்டம் நடத்த ஆரம்பிப்பதற்கு முன்பு தெரியாதா மார்ச் ஏப்ரல் மாதங்களில் பரீட்சை நடக்கும் என்பது? நல்லா விளையாட்டு காட்டுங்க ஆனால் திமுக ஆகட்டும், அதிமுக ஆகட்டும் உங்களுக்கு தோல் வாக்குறுதிகள் மட்டும் தான் என்றும் பழம் கோரிக்கைகள் ஏற்பு இல்லை ஜாக்டோ ஜியோ தலைவர்கள் பாடு கொண்டாட்டம். அரசு ஊழியர்களுக்கு திண்டாட்டம்.


S.kausalya
மார் 04, 2025 10:07

இப்படியே தள்ளி தள்ளி போட்டு அடுத்த வருடம் தேர்தல் வரை பேசியே காலம் தள்ளுங்கள். பின் அந்த தேர்தலிலும் DMK விற்க்கே ஒட்டு போட்டு மகிழுங்கள். திமுகவே மறுபடியும் வரும் பட்சத்தில் அதற்கு அடு்த்த தேர்தல் வர ஒரு வருடம் இருக்கும் போது மறுபடியும் போராட்டம் என கூவுங்கள். வேறு கட்சி ஆட்சிக்கு வந்தால் உடனேயே போராட்டம் என்று கூப்பாடு போடுங்க. உங்களின் உற்ற நண்பன் திமுக உங்களுடன் களத்தில் சேரும். அதில் ஒன்று உங்களுக்கே தெரியும் பழைய ஓய்வூதியம் வழங்க முடியாது என்று.


C G MAGESH
மார் 04, 2025 09:54

தி மு க வின் கிளை கழகம் தான் இது. ரொம்ப பேராசை பிடித்த கும்பல்.


rama adhavan
மார் 04, 2025 09:32

ஆளும் கட்சியின் செல்ல வளர்ப்பு பிராணி. பொதுவாக வால் தான் ஆட்டும். எப்போவாவது செல்லமாக குரைக்கும். எப்போவும் எஜமானை கடிக்காது. இது எஜமானுக்கும் தெரியும்.


சமீபத்திய செய்தி