உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு விரைவு பஸ்கள் வாடகைக்கு விடப்படும்!

அரசு விரைவு பஸ்கள் வாடகைக்கு விடப்படும்!

சென்னை:விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன், வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில், அதிநவீன சொகுசு, 'ஏசி' மற்றும் படுக்கை வசதி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களை, குழுவாக சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும், அறுபடைவீடு உள்ளிட்ட கோவில்களுக்கு செல்வதற்கும், ஒப்பந்த ஊர்தி அடிப்படையில், குறைந்த கட்டணத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பஸ்கள், சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கும், இதர இடங்களில் இருந்து வெவ்வேறு பகுதிகளுக்கும் இயக்கும் வகையில் வாடகைக்கு தரப்படும். மேலும் விவரங்களுக்கு, www.tnstc.inஎன்ற இணையதள முகவரி மற்றும் 94450 14402, 94450 14424, 94450 14463 ஆகிய மொபைல் போன் எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ