உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கழிவுநீர் தொட்டியில் மனிதர்கள் இறங்கும் நடைமுறையை ஒழிக்க அரசுக்கு உத்தரவு

கழிவுநீர் தொட்டியில் மனிதர்கள் இறங்கும் நடைமுறையை ஒழிக்க அரசுக்கு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : கழிவுநீர் தொட்டி மற்றும் பாதாள சாக்கடைகளில், மனிதர்கள் இறங்கும் நடைமுறையை முழுமையாக ஒழிக்க, அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4mx9oj81&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளில் அடைப்பை நீக்கி, சுத்தம் செய்யும் பணிகளில், மனிதர்களை நேரடியாக ஈடுபடுத்தக் கூடாது; விஷ வாயுவால் பலியானவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'சபாய் கர்மாச்சாரி அந்தோலன்' என்ற அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கழிவுநீர் தொட்டிக்குள் மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்த தடை விதித்தது. இயந்திரங்களை, பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தவும் உத்தரவிட்டிருந்தது.நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி சுத்தப்படுத்தும் அவலம் ஆங்காங்கே தொடர்ந்தது; இதனால், மரணமும் தொடர்ந்தது.நீதிமன்றத்திலும் அவ்வப்போது இதுகுறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.கடந்த 2017ல் தொடரப்பட்ட இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்த போது பிறப்பித்த உத்தரவு:நாடு சுதந்திரம் அடைந்து, 46 ஆண்டுகளுக்கு பின், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய, மனிதர்களை பயன்படுத்த தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. மனித தன்மையற்ற இந்த நடைமுறையை ஒழிக்க, சட்டத்தை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். நீதிமன்றங்கள் பல உத்தரவுகளை பிறப்பித்தும், மனிதர்களை இந்தப் பணிகளில் நேரடியாக ஈடுபடுத்தும் நடைமுறை முழுமையாக ஒழிக்கப்படவில்லை. இந்த நடைமுறையை முழுமையாக ஒழிக்க, அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.பாதாள சாக்கடை, கழிவுநீர் தொட்டிகளை சுத்தப்படுத்த, அடைப்புகளை நீக்க, இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும். மனிதர்களை நேரடியாக ஈடுபடுத்துவோருக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். பலியாகும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, தற்போது, 30 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது; காயங்களுக்கு ஏற்ப, 20 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்த இழப்பீட்டுத் தொகையை, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிகரிக்க வேண்டும். உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு கருணை வேலை வழங்க வேண்டும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.விசாரணையை, ஆகஸ்ட் 5க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்புசாமி
ஏப் 30, 2024 15:45

ரெண்டு கோடி வேலைகளில் இதுவும் ஒண்ணு. இப்பிடி வேலை செய்யக்கூடாதுன்னா, நீதிமன்றங்களில் இவிங்களுக்கு நல்க வேலை.


nb
ஏப் 30, 2024 11:22

திராவிட மாடல் 50 வருஷமா இந்த விஷயத்த கண்டுக்காம இருக்கா


GMM
ஏப் 30, 2024 10:14

சரியாக சுத்தப்படுத்தி விட்டார்களா என்று அதிகாரி, அமைச்சர் இறங்கி பார்வையிடும் புகைப்படம் கட்டாயம் என்று இருந்தால், சிலை, சமாதி நிறுத்தி, நவீன உபகரணங்கள் சில மணியில் வந்து சேரும் மனிதர்களை திராவிடம் ஒரு போதும் கழிவு நீரில் இறக்காது திடப்பொருளை குழாயில் போட விடாது


D.Ambujavalli
ஏப் 30, 2024 06:32

டிஜிட்டல் இந்தியா என்று பெருமை கொள்கிறோம் நம் சகோதரர்களைக் கழிவுநீர் தொட்டி, சாக்கடைகளில் மூழ்கடித்து, விஷ வாயுவால் உயிரிழக்க வைக்கிறோம் கண்டா இடங்களில் சிலைகள் நினைவு மண்டபங்கள் இவற்றைவிட சக மனிதனை கௌரவமாக நடத்தி, அவரது உயிருக்குப் பாதுகாப்பளிப்பதை முன்னிறுத்த அக்கறை இருந்தால் என்றோ இயந்திரங்கள் வாங்கப் பட்டிருக்கும் ஏழையின் உயிருக்கு கொடுக்கும் மதிப்பு அவ்வளவுதான்


R.GOPAL
ஏப் 30, 2024 06:16

எனக்கு தெரிஞ்சு 60 வருசமா இதையேதான் சொல்லிக்கிட்டு வராங்க ஒன்னும் செய்ய முடியல்லை Modiji கிட்ட கொடுக்க சொல்லுங்க 5 வருசத்து செஞ்சு முடிப்பரு


K.Muthuraj
ஏப் 30, 2024 09:01

பிறகு எதுக்கு மாநில அரசு மாநகராட்சிகள் நகராட்சிகள் பஞ்சாயத்துக்கள்


Kasimani Baskaran
ஏப் 30, 2024 06:14

திராவிட சமூக நீதியில் இதுவும் ஒன்று - ஆனால் இதை நிரந்தரமாக வைத்திருக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்


vadivelu
ஏப் 30, 2024 06:08

அரசு செலவில் பல முறை அயல்நாடுகளுக்கு செல்லும் அதிகாரிகளும், அரசியில் தலைவர்களும் இதற்கான நடைமுறைகளை ஏன் இன்னமும் அறியாமலும், அறிந்து வந்தால் செயல் படுத்தாமல் இருக்கிறார்கள்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை