உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாம்பு பிடிக்க போனவர் அதே பாம்பு கடித்து பலி

பாம்பு பிடிக்க போனவர் அதே பாம்பு கடித்து பலி

வடவள்ளி:காளப்பநாயக்கன்பாளையத்தில், பாம்பு பிடிக்க போனவரை, பாம்பு கடித்ததில் உயிரிழந்தார்.கோவை மாவட்டம், இடையர்பாளையம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் முரளி, 44. இவர், 15 ஆண்டுகளாக, ஊருக்குள் போகும் பாம்புகளைப்பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைக்கும் தன்னார்வலராக இருந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி, சந்தியா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, காளப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் அறைக்குள், கண்ணாடி விரியன் பாம்பு புகுந்துள்ளது. அங்குள்ளவர்கள் முரளிக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த முரளி, பாம்பை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக, கண்ணாடிவிரியன் பாம்பு முரளியின் காலில் கடித்துள்ளது. சிறிது நேரத்திலேயே முரளி மயங்கி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள், பரிசோதனை செய்துவிட்டு, முரளி உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.வடவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை