உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் வெப்ப தாக்கம்; வட மாநிலங்களுக்கு மழை

தமிழகத்தில் வெப்ப தாக்கம்; வட மாநிலங்களுக்கு மழை

சென்னை: 'வரும், 18ம் தேதி வரை வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும்; தமிழக, ஆந்திர கடலோரம், சூறாவளி காற்று வீசும்' என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதன் செய்திக் குறிப்பு:

நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் தேவாலாவில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது. இதை தவிர, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், பெரும்பாலான இடங்களில், 1 முதல் 3 செ.மீ., வரை மழை பெய்துள்ளது.தென் மாநிலங்களின் மேல், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். வரும், 18ம் தேதி வரையிலும், ஒரு வாரத்துக்கு பெரும்பாலான இடங்களில், கன மழைக்கு வாய்ப்பில்லை. சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகும்.மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகள், ஆந்திர கடலோரம், வடக்கு அந்தமான் பகுதிகளில், மணிக்கு, 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, வரும், 16ம் தேதி மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தென் மேற்கு பருவ மழை, கேரளாவைத் தொடர்ந்து, கர்நாடகா, ஆந்திரா, கோவா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை நோக்கி நகர்கிறது. அதனால் வரும் நாட்களில், வட மாநிலங்களில் பருவ மழை கொட்டும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ராஜா68
ஜூன் 13, 2024 10:45

இன்று ஒரே வெயில் ஆனால் எங்கள் பகுதியில் காலை முதல் மின்சாரம் கிடையாது மதியம் மூன்று மணிக்கு தான் வருமாம். பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் கஷ்டப்படுகிறார்கள். அலுவலகங்களிலும் எல்லோரும் கஷ்டப்படுகிறார்கள் வீடுகளில் முதியோர் குழந்தைகள் அவதிப்படுகிறார்கள் எல்லா வீடுகளிலும் இன்வெர்ட்டர் கிடையாது. எதற்கு இந்த மெயின்டனன்ஸ் என்று தெரியவில்லை அப்படி இருந்தும் தினமும் ஒரு மணி நேரம் அரை மணி நேரம் என்று அவ்வப்போது மின்சாரம் இருப்பதில்லை. மெயின்டனன்ஸ் என்ற பெயரில் பவர் கட்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 13, 2024 09:48

பாஜக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மை உடன் நடந்து கொள்ள ஆரம்பித்து விட்டது. மோடி தமிழகத்திற்கு மழை நீரை கூட கொடுக்காமல் குஜராத்திற்கு கொண்டு சென்று விட்டார். தமிழகத்தில் நாற்பதுக்கு நாற்பதும் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று விட்டதால் மழையை கூட விட்டு வைக்காமல் வடக்கே கொண்டு சென்று விட்டது ஒன்றிய அரசு. இது தான் மோடியின் முகம். சமூக நீதி அழிக்கப்பட்டது. திராவிட மாடல் அரசு விடாது போராடும். நாற்பதும் நமதே. நாளை நமதே. தமிழக மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள்.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ