| ADDED : ஜூன் 11, 2024 01:29 PM
சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 11) முதல் 5 நாட்களுக்கு மூன்று டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழகத்தில் இன்று (ஜூன் 11) முதல் 5 நாட்களுக்கு மூன்று டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும். அதிகபட்சம், 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். மீனவர்களுக்கான எச்சரிக்கை
குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்மாவட்ட கடலோர பகுதிகளில், வரும் ஜூன் 12ம் தேதி வரை, மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.