உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை:கோவை, நீலகிரி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகம், புதுச்சேரியில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இது, அடுத்து வரும் நாட்களிலும் தொடரும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால், கோவை, நீலகிரி, கடலுார், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில், இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்யலாம். தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில் பலத்த தரைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் மிதமான மழை தொடரும். சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, தென் மாவட்ட கடலோரம், குமரிக்கடல் பகுதிகளில், ஆகஸ்ட் 8 வரை மணிக்கு, 35 முதல் 45 கி.மீ., வேகத்திலும்; இடையிடையே மணிக்கு, 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ