உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்றும், நாளையும் கனமழை தொடரும்!

இன்றும், நாளையும் கனமழை தொடரும்!

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்பட்டாலும், பெரும்பாலான இடங்களில் மழை பொழிவு நிலவுகிறது. தென் மாவட்ட நிலப் பகுதிகள், குமரிக்கடல் உள்ளிட்ட பகுதிகளின் மீது நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, மேற்கு நோக்கி நகர்கிறது. இது, கேரள பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதியில் காணப்படும் வளிமண்டல சுழற்சியுடன் இணைந்து காணப்படும். அடுத்து வரும் நாட்களில், இது வடக்கு கேரளா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி செல்ல வாய்ப்புள்ளது. அதனால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்கள், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.கோவை, நீலகிரியில், ஒரு சில இடங்களில் இன்று மிக கனமழையும்; திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில், சில இடங்களில் இன்று கனமழையும் பெய்ய வாய்ப்புஉள்ளது. நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரியில் வரும் 24ம் தேதி வரை பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில், ஆக., 22 வரை மணிக்கு, 35 முதல் 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும், தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல், மத்தியமேற்கு, வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு, 45 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசலாம். எனவே, மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி