உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆன்லைன் மருந்து விற்பனை கொள்கை; மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆன்லைன் மருந்து விற்பனை கொள்கை; மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:'ஆன்லைன்' வாயிலாக மருந்து விற்பனை நடப்பது குறித்து, மத்திய அரசு விரைந்து கொள்கையை இறுதி செய்து வெளியிடும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசு வகுத்துள்ள வரைவு விதிகளுக்கு ஒப்புதல் பெற்று வெளியிடும் வரை, ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு கெமிஸ்ட்ஸ் மற்றும் மருந்து விற்பனையாளர்கள் சங்கம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்கவும், மனுவில் கோரப்பட்டது.இந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. பொது மக்கள் நலன் கருதி, ஆன்லைனில் மருந்து விற்பனை தொடர்பாக வகுத்துள்ள விதிமுறைகளை, விரைந்து கெஜட்டில் வெளியிடவும், அதுவரை, ஆன்லைனில் மருந்து விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது எனவும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 2018ல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதை எதிர்த்து, ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் சார்பில், மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, ஆன்லைனில் மருந்து விற்பனையை மேற்கொள்ளக் கூடாது என்ற உத்தரவுக்கு, இடைக்காலத் தடை விதித்தது.இதையடுத்து, இம்மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தன. மத்திய அரசு சார்பில், வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, “வரைவு விதிகள் இறுதி செய்யும் பணியில் முன்னேற்றம் உள்ளது. வர்த்தகர்கள், பொது மக்கள் எழுப்பிய பிரச்னைகளுக்கு தீர்வு காண, புதிய கொள்கை வகுக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.“டில்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, மத்திய சுகாதார அமைச்சக இணைச்செயலர் ஆஜராகி, ஆன்லைன் மருந்து விற்பனை குறித்த கொள்கை வகுக்க, நான்கு மாதங்கள் அவகாசம் கோரியுள்ளார்,” என்றார்.இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்தப் பிரச்னையை, ஏற்கனவே டில்லி உயர் நீதிமன்றம் விசாரிப்பதாலும், புதிய கொள்கையை இறுதி செய்யும் பணியில் மத்திய அரசு உள்ளதாலும், மேல்முறையீட்டு மனுக்களை பைசல் செய்கிறோம். புதிய கொள்கையை விரைந்து இறுதி செய்து வெளியிடும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. அதுவரை, தற்போதைய நிலை தொடரும்.உரிமம் பெற்ற மருந்து நிறுவனங்கள் வாயிலாக மட்டுமே, ஆன்லைனில் மருந்து விற்பனையை மேற்கொள்ள முடியும் என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. இதை மீறினால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Semmalai Viswanathan
ஜூலை 05, 2024 23:30

குத்துமதிப்பாக மருந்துகள் விநியோகம் செய்திருந்தால் கொத்து கொத்தாக மக்கள் இறந்திருப்பார்கள்


தமிழ்வேள்
ஜூலை 04, 2024 13:10

ஆன் லைனில் விலை குறைவு, மக்களுக்கு சாதகம் கூட ..ஆனால் இந்த லோக்கல் மருந்துகடைக்காரர்கள், 300 சதவீத லாபத்தில் மருந்து விற்றல், சப்ஸ்டிடுட் மருந்துகளை, தான்தோன்றித்தனமாக கொடுத்தல் , போன்றவற்றை செய்து சில்லறை பார்ப்பதால் , ஆன்லைன் விற்பனை சேவையை எதிர்க்கிறார்கள் ..சென்னை உயர்நீதிமன்றம், பாரத அரசுக்கு எதிராக, திராவிட திமுக அரசுக்கு ஓவராக குடைபிடிக்கும் வேலையை செய்வது ஏன் ?


GMM
ஜூலை 04, 2024 11:51

நிர்வாகத்திற்கு அதிகார எல்லை உண்டு. ஒரு மாவட்ட ஆட்சியர் மற்றோரு மாவட்ட எல்லையில் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார். நீதி நிர்வாக எல்லை நீதிமன்றம், போலீசுக்கும் இருக்கும். ஆனால், கடைபிடிப்பது இல்லை. ஏன்? எல்லை தாண்டி மீன் பிடிக்க முடியாது. மேலும் நீதிமன்ற நிர்வாக வகுத்து செயல்பட முடியும். விதிமீறலை விசாரிக்க நீதிமன்றம். விதி வகுக்கும் முன் எதன் அடிப்படையில் விசாரிக்க முடியும். கருத்து, உபதேசம் கூறும் இடமல்ல நீதிமன்றம். ஏராளமான சட்ட விதிகள் உள்ளன. அதனை திருத்த உதவுங்கள்.


ஆரூர் ரங்
ஜூலை 04, 2024 10:55

பழைய மருந்து சீட்டுக்களின் தேதியைத் திருத்தி மீண்டும் மருந்து வாங்கும்(?) வாடிக்கையாளர்கள் ஒருபுறம். அபூர்வமான மருந்துகள் உள்ளூரில் கிடைக்காததால் ஆன்லைனை நம்பும் மக்கள் மறுபுறம். எழுதிய டாக்டராலேயே(???) படிக்க முடியாத கிறுக்கெழுத்து சீட்டுக்களைக்கூட குத்துமதிப்பாக படித்துவிட்டு மருந்துகளை அனுப்பும் ஆன்லைன் வியாபாரிகள். இவை உண்மையெனில் அரசுக்கு இது தீராத தலைவலியாக இருக்கும். பாவம். சிறிய மருந்தக உரிமையாளர்கள்.(நான் இயன்றவரை மத்திய அரசின் ஜன் அவுஷதி கடைகளிலேயே வாங்குகிறேன்).


Subramanian
ஜூலை 04, 2024 09:16

மேலும் மருந்துகள் 20-25 % தள்ளுபடி விலையில் ஆன்லைனில் கிடைக்கின்றன. இல்லம் வந்து கொடுத்து செல்கின்றார்கள்.பொது மக்களுக்கு நல்ல பலன் மற்றும் வசதியாக உள்ளது


Kasimani Baskaran
ஜூலை 04, 2024 05:19

ஆலோசனைகளை வழங்கலாமே தவிர மத்திய அரசு எப்படி நடக்கவேண்டும் என்று நீதிமன்றம் ஒரு பொழுதும் உத்தரவு பிறப்பிக்க முடியாது. மாநில அரசுக்கு ஆணையிட முடியாதவர்கள் எப்படி மத்திய அரசுக்கு மட்டும் ஆணை பிறப்பிக்கலாம். இந்து அறநிலையத்துறை என்று ஒன்று இருக்கிறது. பல்லாயிரம் கோர்ட் ஆணைகள் வந்தாலும் கூட மதிக்க மாட்டார்கள்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி