உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளி பெயர்களில் உள்ள ஜாதியை அகற்ற வேண்டும் அரசு பள்ளி என்றே பெயரிட உயர் நீதிமன்றம் உத்தரவு

பள்ளி பெயர்களில் உள்ள ஜாதியை அகற்ற வேண்டும் அரசு பள்ளி என்றே பெயரிட உயர் நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஜாதி, சமூகத்தை குறிப்பிடும் வகையிலான பெயர்களை, பள்ளி பெயர்களில் இருந்து அகற்றவும், அரசு பள்ளி என்றே பெயரிட வேண்டும் எனவும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து, 66 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக - பொருளாதார பிரச்னைக்கு தீர்வு காண அரசை வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், குமரப்பன் அமர்வு, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளை வழக்கில் பிரதிவாதிகளாக சேர்த்து, பதில் அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.இவ்வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது பிறப்பித்த உத்தரவு:கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு, அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கின்றனவா; அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா என்பதை, அரசு தெளிவுப்படுத்த வேண்டும். அந்தப் பகுதி மக்களின் முன்னேற்றத்துக்கு, நலனுக்கு, அரசு தரப்பில் என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை விளக்க வேண்டும். இதுகுறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை பரிசீலித்த நீதிபதிகள், அதுகுறித்து அதிருப்தி தெரிவித்தனர். அரசுக்கும் பல கேள்விகளை எழுப்பினர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலர் தாக்கல் செய்த அறிக்கை, போதுமானதாக இல்லை; நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் கூறியது போல, நடைமுறையில் உள்ளதை பிரதிபலிப்பதாக இல்லை. கல்வராயன் மலைப்பகுதிக்கு செலவழிக்கப்பட்ட தொகை, அறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. அந்தப் பகுதி மக்களுக்கு முறையாக பணம் செலவு செய்யப்பட்டதா என்ற சந்தேகமும் எழுகிறது.முதன்மை செயலரின் அறிக்கையில், எங்களுக்கு முழுதும் திருப்தி இல்லை. கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகள், 'அரசு பழங்குடியின உறைவிட பள்ளி' என்ற பெயரில் இயங்குகின்றன. அரசு பள்ளி என்ற பெயருடன், 'பழங்குடி' என்ற வார்த்தையும் பயன்படுத்தப்படுவது தேவையற்றது. அவ்வாறு பயன்படுத்துவது, அந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை களங்கப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.பழங்குடியின பள்ளியில் படிக்கிறோம்; மற்றவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு இணையானது இல்லை என்ற எண்ணம், அவர்களுக்கு ஏற்படும். இதை ஏற்க முடியாது. எனவே, பள்ளிகளின் பெயர்களுடன் குறிப்பிட்ட சமூகத்தை, ஜாதியை குறிக்கும் வகையிலான பெயர்களை பயன்படுத்தினால் அவற்றை அகற்ற வேண்டும்; அரசு பள்ளிகள் என்றே பெயரிட வேண்டும். அந்தப் பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு, அந்தப் பள்ளிகளில் அனுமதி வழங்க வேண்டும்.இந்த 21ம் நுாற்றாண்டில் கூட, பொது மக்கள் நிதியில் இயங்கும் அரசு பள்ளிகளில், ஜாதி ரீதியிலான பெயர்களை பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது. சமூக நீதியில் முன்னணியில் திகழும் தமிழகத்தில், அரசு பள்ளிகள் அல்லது அரசு நிறுவனங்களின் பெயருக்கு முன்னும், பின்னும், களங்கப்படுத்தும் வகையிலான வார்த்தைகளை சேர்க்க அனுமதிக்க முடியாது. இதுகுறித்து, அரசின் தலைமைச் செயலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.விசாரணையை, ஆகஸ்ட் 2க்கு தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Kalyanaraman Andhukuru.R.
ஜூலை 29, 2024 12:44

குறிப்பிட்ட சமூக இட ஒதுக்கீடு என்று சொல்லும் பொழுது கேவலமாக இல்லையா?


அப்பாவி
ஜூலை 27, 2024 20:25

முன்னாடி ஒரு கூத்தாடி தெருப் பெயர்களில் ஜாதியை ஒழிச்சு ஜாதியையே தமிழ்நாட்டிலிருந்து ஒழிச்சு புர்ச்சி பண்ணினாரு. அதே பாதையில் நீதிமன்றங்கள் இப்போது. ஜாதி ஒழிஞ்சிரும்.கோவாலு.


ஆரூர் ரங்
ஜூலை 27, 2024 22:09

டாக்டர் நாயர் சாலை பெயர் மாற்றவில்லை.இத்தனைக்கும் அவர் திராவிட இயக்க முன்னோடியாம்.


vimal raj
ஜூலை 27, 2024 16:43

This order will applicable for all over tamilnadu? or only ad.welfare school. Even college has name of the community, example ayya Nadar college in Sivakasi, kallar schools in madurai districts, erode ....... naikkar college. Good initiative by HC.. thank you.


surya krishna
ஜூலை 27, 2024 15:57

Jaathu Matha matrum vetru mozhliyil ulla peyarkalai eduthuttu tamil peyarkalai vaikka vendum


Sridhar
ஜூலை 27, 2024 14:53

மொதல்ல இந்த திருட்டு திராவிட கும்பலை ஒழித்தாலே எல்லாம் சரியாகிவிடும். இந்த மாதிரியான கோர்ட் மற்றும் நீதிபதிகள் இருக்கமாட்டாங்க.


Kalaiselvan Periasamy
ஜூலை 27, 2024 13:07

நீதி மன்றமே , முதலில் வேலை மற்றும் பள்ளியி சேரும் பாரத்தில் உள்ள ஜாதி என்ற வார்த்தையை எடுக்க சொல்லுங்கள் மேலும் ஜாதி அடிப்படையில் ஒதுக்கீடு இல்லை என்று உத்தரவு போட்டால் பலன் உண்டு . இல்லையே இந்தியா என்றுமே மூடர்களின் கூடாரம் தான் .


Ram pollachi
ஜூலை 27, 2024 12:41

நல்ல தரமான சாராயத்தை வாங்கி குடித்திருந்தால் இந்த கேள்வி எழுந்திருக்காது. பழங்குடி மற்றும் பட்டியல் இன மக்களை மிகவும் உயர்ந்த ஜாதி என்று அழைக்க ஆணை போட்டால் வீண் சச்சரவுகளை தவிர்க்க முடியும்... கட்டி முடிந்த நீதிமன்றத்தை எப்போது திறப்பீர்கள்? சாலை விபத்தில் இறந்த நீதிபதி புதைக்கப்பட்ட இடத்தை முதலில் பாருங்கள் சமூக நீதி தள்ளாடுவது நன்கு புரியும்.


Subramaniam Mathivanan
ஜூலை 27, 2024 12:09

மதம் சார்ந்த பெயர்களையும் தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் என அணைத்திலும் நீக்க தேதி குறிப்பிட்டு கோர்ட் ஆணை வெளியிடவும்


சந்திரன்
ஜூலை 27, 2024 09:00

அப்படியே கல்வி துறையில் தூக்கிட்டு அனை வரையும் மெரிட்ல கொண்டு வந்தீங்கன்னா சாதிய ஒழிச்சிடலாம்


Kasimani Baskaran
ஜூலை 27, 2024 06:52

அரசு பள்ளிக்கு கட்டிடம் கட்ட நிதி கொடுத்தவர்களை மறந்து விட வேண்டுமா? ... திராவிட நீதி பிரண்டு விட்டது போல தெரிகிறது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை