உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சோலார் பேனல்களை பாதுகாப்பது எப்படி?

சோலார் பேனல்களை பாதுகாப்பது எப்படி?

- சேதுராமன் சாத்தப்பன் -புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களான சூரிய, காற்று மற்றும் நீர் மின்சாரம் போன்ற சக்திகளை பயன்படுத்துவதன் வாயிலாக கார்பன் - டை - ஆக்சைடு உமிழ்வுகள் கணிசமாகக் குறைக்கப்படும் அல்லது அகற்றப்படும் ஒரு 'டிகார்பனைஸ்' செய்யப்பட்ட ஆற்றல் அமைப்பை அடைய முடியும்.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல், சுத்தமானது மற்றும் காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கும் அபாயகரமான உமிழ்வை உருவாக்காது. உலகம் முழுவதும் ஆற்றல் தேவை அதிகரித்து வருவதால், உலகளாவிய எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதில் புதுப்பிக்கத்தக்கவை வருங்காலத்தில் இன்னும் பெரிய பங்கு வகிக்கும். சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகியவை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியின் அடிப்படையில் முன்னணி நாடுகளில் சில.

சூரிய எரிசக்தி

சூரிய எரிசக்தி புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் அபரிமிதமான ஆற்றலுடன் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு தொழில். இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமாக உள்ள நாடுகளில் மின்சார பற்றாக்குறை எப்போதும் இருக்கும்.இந்தியாவின் பெரிய பலங்களில் ஒன்று சூரிய சக்தி. அதிலிருந்து மின்சாரம் எடுப்பது தற்போது அதிகமாகி வருகிறது. சூரிய எரிசக்தி இந்தியாவில் அதிக அளவு கிடைத்தாலும், அதில் 50 சதவீத சக்தியை சரிவர பயன்படுத்துவதில்லை.சூரிய எரிசக்தியை சரிவர பயன்படுத்த அதிலிருந்து எடுக்கப்படும் மின்சார அளவை அதிகரிக்க 'ரோபாடிக் டெக்னாலஜி,' நாம் செய்ய முடியாத பல காரியங்களை எளிதாக செய்து விடுகிறது. இதனால் மனித குலத்துக்கு பல பயன்கள் கிடைத்துள்ளன.

என்ன பிரச்னை?

சோலார் பேனல்களை பராமரிப்பது கடினமான பணி. அழுக்கு, துாசு மற்றும் பிற குப்பை குவிவது அவற்றின் செயல்திறனை கணிசமாகக் குறைக்கும், இது குறைந்த ஆற்றல் உற்பத்தி மற்றும் சோலார் ஆலை நடத்துபவர்களுக்கு வருவாய் இழப்புக்கு வழிவகுக்கும். தற்போது சராசரியாக, சோலார் பேனல்கள் பரப்புகளில் பதிக்கப்பட்டிருக்கும் அழுக்கு இழப்புகளால் செயல்திறன், 35 சதவீதம் குறைந்துள்ளது.சோலார் பேனல் சுத்திகரிப்பு தேவை என்பது ஆலை நடத்துபவர்களுக்கு மட்டும் பிரச்னை இல்லை. சுத்தம் இல்லாததால் சோலார் பேனல்களின் செயல்திறன் குறைவது பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.

எப்படி செயல்படுகிறது?

போட்டோம் டெக்னாலஜிஸ் என்ற ஸ்டார்ட் அப் கம்பெனி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கு பயனுள்ள ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் தீர்வுகளை வழங்கும் நோக்குடன் நிறுவப்பட்டது. இவர்களின் ரோபோ அமைப்பு சோலார் பேனல்களில் செல்லவும், சுத்தம் மற்றும் மேற்பரப்பு ஆய்வு பணிகளை செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.ரோபோ பயன்படுத்தும் துப்புரவு முறையானது உலர் துப்புரவு முறை. இது அனைத்து வகையான தட்பவெப்ப நிலைகளிலும் பயனுள்ளதாக இருக்கும், நீர் அல்லது ரசாயனங்களின் தேவையை நீக்குகிறது. ரோபோட்டிக் அமைப்பில் ரிமோட் கன்ட்ரோல் மற்றும் கண்காணிப்புக்கான வெப் டேஷ்போர்டும், சோலார் பேனல்களில் மைக்ரோகிராக்குகள் மற்றும் ஹாட்ஸ்பாட்களைக் கண்டறிய வெப்ப ஸ்கேனர்கள், பேனல் ஆரோக்கியம் குறித்த தகவல்களையும் வழங்கும். இணையதளம்: www.photomtechnologies.comவிவரங்களுக்கு: இ-மெயில்: sethuraman.gmail.com, மொபைல் போன்: 98204 - 51259, இணையதளம் www.startupandbusinessnews.co


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை