உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மனிதக்கழிவு மனிதர் அகற்றும் அவலம் தமிழகத்தில் இனி கூடாது

மனிதக்கழிவு மனிதர் அகற்றும் அவலம் தமிழகத்தில் இனி கூடாது

திருப்பூர் : ''மனித உயிர்களுக்கு மதிப்பளித்து, இனி எங்கும் மனிதர்கள் கொண்டு கழிவுகளை அகற்றுவதை தடை செய்ய வேண்டும்,'' என்று ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: தேசிய துாய்மை பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன், 'இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தோல் பதனிடும் தொழிற்சாலை ரசாயன கழிவுநீர், உணவு விடுதி கழிவுகளால் ஆன கழிவுநீர் தொட்டி, மனித மலம் செல்லும் கழிவு நீர் கால்வாய் முதலியவற்றில் மனிதர்களை கொண்டு சுத்தம் செய்யும் அவலம் பெருமளவில் நடக்கிறது. இறப்புகள் அதிகமாக நடக்கிறது' என்று கூறியுள்ளார்.சமத்துவம், சமூக நீதி பேசும் திராவிட ஆட்சியில் தான் மனிதர்களே, கழிவுகளை அகற்றும் கொடுமைகள் அதிகமாக நடக்கிறது. சில ஆண்டுகள் முன், சுப்ரீம் கோர்ட், மனிதர்களை கழிவுநீர் கால்வாயில் இறக்கி, சுத்தம் செய்வதற்கு, கடும் கண்டனம் தெரிவித்து, அதை முற்றிலுமாக தடை செய்து தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை மீறி இந்த அரசு நடக்கிறது.தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி இனி எங்கும் மனிதர்கள் கொண்டு கழிவுகளை அகற்றுவதை உடனடியாக தடை செய்ய வேண்டும். மீறினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவிட வேண்டும்.துாய்மை பணிகளுக்கு வேண்டிய நவீன கருவிகளை வாங்குவதற்கும், துாய்மை பணியாளர்களுக்கு வேண்டிய கையுறை, முக கவசம், நவீன கருவிகள் மற்றும் தேவையான பாதுகாப்பு பொருட்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தஞ்சை மன்னர்
ஜூன் 14, 2024 11:21

முதலில் தமிழகத்தில் இந்த பழக்கம் குறைந்து விட்டது போய் ம பி உபி குஜராத் போய் பாரு அங்கே தான் இன்னும் இருக்கு கையால் அள்ளுவது கடவுள் கொடுத்த வரம் என்றும் அவர்கள் கடவுளின் குழந்தை என்றும் சொல்லி இருக்கறப்ப உங்க நரேந்திர தமோதிரதாஸ் ஆனா அந்த 3 சதவீதம் மட்டும் அதெல்லாம் செய்ய கூடாது என்று சொல்லி இருக்காங்க அதுக்குத்தான் உங்களை போல ..சமூகம் இருக்கு என்று ..சொல்லிக்கிட்டு இருக்காங்க


Sampath Kumar
ஜூன் 14, 2024 09:59

வந்துட்டாரு வாய்க்க தக்காரருக்கு போவியா


karthik
ஜூன் 14, 2024 08:31

இன்னைக்கு தான் தூங்கி எழுந்து வந்திருக்கான் போல.. 60 வருஷமா இவனுங்க தான் இங்க கிழிச்சிட்டு இருக்கானுங்க.. மாற்றங்கள் எல்லாம் தொழில்நுட்பத்தால் தொழில்நுட்ப வளர்ச்சியால் தன்னால மாறுதே ஒழிய இவனுங்க ஒன்னும் கிழிச்சிடல


Kasimani Baskaran
ஜூன் 14, 2024 08:24

இன்று நேற்றல்ல மனிதக்கழிவுகளை மனிதன் அகற்றக்கூடாது என்று அரை நூற்றாண்டாக ஆட்சியில் இருந்து கொண்டே மரண உருட்டு உருட்டுகிறார்கள்.


Svs Yaadum oore
ஜூன் 14, 2024 08:21

இதெல்லாம் வடக்கன் மாநிலத்தில் தான் நடக்குது ...இங்கே இதெல்லாம் கிடையாது ..இங்கே ராமசாமி மண்ணில் இதுபோன்ற கேள்விகள் கேட்கக்கூடாது ....ஆனால் வடக்கன் வருங்கால பாரத பிரதமர் என்றால் அப்ப மட்டும் விடியலுக்கு இனிக்கும் ...


Svs Yaadum oore
ஜூன் 14, 2024 07:56

இந்தியாவிலேயே அதிக வரி செலுத்தும் மாநிலம் தமிழ் நாடு ..ராமசாமி மாநிலம் ..இந்தியாவுக்கே சோறு போடும் மாநிலம் இதுதான் ... இதுக்கெல்லாம் காரணம் விடியல் ராமசாமி திராவிடனுங்க ....ஆனால் இங்குதான் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கழிவு நீர் கால்வாய் இறப்புகள் அதிகம் ....இப்போது விடியல் திராவிடனுங்க மத சார்பின்மையாக கோவையில் முப்பெரும் விழாவில் ரொம்ப பிஸி .....இதை கவனிக்க இப்போது நேரம் கிடையாது ....


சசிக்குமார் திருப்பூர்
ஜூன் 14, 2024 09:37

gst வருவாய் மகாராஷ்டிரா 38 ஆயிரம் கோடி. தமிழ்நாடு 12 ஆயிரம் கோடி


Priyan Vadanad
ஜூன் 14, 2024 07:23

இப்போதுதான் கொஞ்சம் நல்ல பிள்ளை வேஷம் போடவேண்டும். இருந்தாலும் இவர் பேச்சு, பூனை உத்திராட்சக்கொட்டை மாலை போட்டிருக்கிற மாதிரி இருக்கிறது.


Kasimani Baskaran
ஜூன் 14, 2024 08:26

அரை நூற்றாண்டாக தமிழகத்தில் திராவிடர்கள்தான் ஆட்சியில் இருக்கிறார்கள். வெறுமனே தொடர்ந்து உருட்டிக்கொண்டே கதறவேண்டியதன் அவசியம் என்ன வந்தது?


Barakat Ali
ஜூன் 14, 2024 10:30

அதென்ன, பாதிக்கப்பட்டவர்களுக்காக இவர் குரல் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதா? உங்கள் அபிமான கட்சிக்குத்தான் அந்த அதிகாரம் இருக்கிறதா?


Priyan Vadanad
ஜூன் 14, 2024 07:21

ஐயா இப்பதான் கோமாவிலிருந்து முழிச்சிகிட்டாரா? பாவம்.


Barakat Ali
ஜூன் 14, 2024 10:29

உங்கள் அபிமானக் கட்சிகள் எத்தனை ஆண்டுகளாக இதைப் பேசி வருகின்றன? அவை எத்தனை ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்தன? ஆனால் சாதித்தது என்ன ????


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி