மேலும் செய்திகள்
சத்யபிரதா சாகு உள்ளிட்ட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
1 hour(s) ago
தி.மு.க., மகளிர் மாநாடு நடந்த இடத்தில் கடும் சுகாதார சீர்கேடு
2 hour(s) ago | 9
திமுக கூட்டணியில் புகைச்சல்: இபிஎஸ் பேச்சு
3 hour(s) ago | 4
சென்னை:வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் வழங்க, நிதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கிடைத்த புகாரின் அடிப்படையில், சென்னையில், நான்கு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.சென்னையில் தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் தர, சில செல்வந்தர்கள் வழியே நிதி ஏற்பாடு செய்துள்ளதாக, தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, தேர்தல் ஆணைய உத்தரவின்படி, சென்னையில், நான்கு இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள கொண்டித்தோப்பு, புரசை வாக்கம், ஓட்டேரி, வேப்பேரி, ஏழுகிணறு ஆகிய இடங்களில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டடங்கள், அலுவலகங்கள் போன்றவற்றில், இந்த சோதனை நடந்தது. இதில், கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கமாக கைப்பற்றப்பட்டுள்ளது. பணம் எண்ணும் இயந்திரங்களை கொண்டு வந்து, கைப்பற்றப்பட்ட ரூபாயை கணக்கிட்டுஉள்ளனர். அதிகாரிகள் சோதனை நடத்திய இடங்கள், சென்னை பாரிமுனையில் எலக்ட்ரிக்கல்ஸ் மொத்த வியாபாரம் செய்யும் தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமானவை என, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
1 hour(s) ago
2 hour(s) ago | 9
3 hour(s) ago | 4