உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடவுள் மறுப்பு அரசால் சிலைகளுக்கு தடை

கடவுள் மறுப்பு அரசால் சிலைகளுக்கு தடை

சேலம்:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹிந்து முன்னணி சார்பில் மாநில அளவில் ஆலோசனை கூட்டம் சேலம், மரவனேரியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், சதுர்த்தி குறித்து, நிர்வாகிகளுடன் ஆலோசித்தார்.தொடர்ந்து அவர் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி செப்., 7ல் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் ஹிந்து முன்னணி சார்பில் 1.50 லட்சம் சிலைகள் வைத்து கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.15 லட்சம் வீடுகளில் வழிபடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிலைகள் 10 அடிக்குள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரு கட்சிகள் சதுர்த்திக்கு இடைஞ்சலாக உள்ளன. மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் 20 முதல் 30 அடி வரை சிலை வடிவமைத்து சதுர்த்தியை கொண்டாடுகின்றனர்.தமிழகத்தில் கடவுள் மறுப்பு அரசால் சிலைகளை தடை செய்கின்றனர். எதிர்காலத்தில் சதுர்த்திக்கு தடை ஏற்பட்டால் இந்த ஆட்சிக்கு பின்னடைவு தான் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

angbu ganesh
ஆக 31, 2024 09:37

ஐயாவுக்கு விநாயகரை பத்தி தெரியல நின்னு கொள்ள மாட்டார் வச்சு செய்வார் அதென்ன மதத்திற்கு ஒரு கொள்கை தளபதி எந்த போர்ல போரிட்டர்ன்னு தெரியல தளபதின்னு பேரு ஒரு வேல 21ம் புலிகேசி போல வெள்ள கொடி காட்டி இருப்பாரோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை