உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனி பிரிவில் மனு கொடுத்தால் நடவடிக்கை இல்லை! பொதுமக்கள் அதிருப்தி

தனி பிரிவில் மனு கொடுத்தால் நடவடிக்கை இல்லை! பொதுமக்கள் அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : - மாவட்ட அளவிலான அதிகாரிகளிடம் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், கோட்டையில் மனு கொடுத்தால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தினமும் நுாற்றுக்கணக்கானோர், சென்னை தலைமை செயலகம் வந்து, முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுக்கின்றனர்.முன்பெல்லாம் மனு கொடுக்க, தலைமை செயலகம் செல்ல, பொதுமக்கள் எளிதாக அனுமதிக்கப்பட்டனர்.ஆனால், மனு கொடுக்க வந்தவர்களில் சிலர், திடீர் போராட்டத்தில் ஈடுபடுவது, தற்கொலைக்கு முயற்சிப்பது போன்ற சம்பவங்கள் அரங்கேறியதால், போலீஸ் கெடுபிடி அதிகரித்தது. மனு அளிக்க வருபவரின் முழு விபரங்களை கேட்டு, மனுவின் விபரங்களை அறிந்து, பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர்.சிலருக்கு போலீசாரே உதவியாக சென்று, மனு கொடுத்த பின் வெளியே அனுப்புகின்றனர்.

புலம்பல்

இப்படி பலத்த சோதனைக்கு இடையில் மனு கொடுத்தாலும் தீர்வு கிடைப்பதில்லை.மனு மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமலேயே, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் கடிதம் அனுப்புகின்றனர் என, மனு கொடுத்தவர்கள் புலம்புவது அதிகரித்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகரை சேர்ந்த ராஜாகிருஷ்ணதேவராயர் என்பவர், கழிவுநீர் கால்வாயை சரி செய்யக்கோரி, முதல்வர் தனிப்பிரிவில், ஆன்லைன் வாயிலாக மனு அளித்துள்ளார்.அதற்கு, 'உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது. சம்பந்தப்பட்ட இடத்தில், வாடகைதாரர் வசித்து வருகிறார். கழிவுநீர் சாலையில் வராத வகையில் தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது. 'மழைக்காலம் முடிந்ததும் உறை இறக்கப்பட்டு தீர்வு காண்பதாக, கட்டட உரிமையாளரிடம் இருந்து கடிதம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, பதில் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இன்று வரை பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை.குடிநீர் குழாய் மீது சாக்கடை நீர் விடப்படுகிறது என, அவர் மீண்டும் மனு அனுப்பி உள்ளார். அடுத்து, அப்பகுதியில் தேவேந்திரன் கோவில் நிலத்திற்கு சொந்தமான நிலத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மனு அளித்துள்ளார்.நிலத்திற்கு கோவில் பெயரில் வழங்கப்பட்ட பட்டா விபரத்தையும் தெரிவித்துள்ளார். அதற்கு, அந்த இடம் கிராம நத்தம் என்பதால், ஆக்கிரமிப்புகளை அகற்றிட வழிவகை இல்லை என, வருவாய் துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பி உள்ளனர்.ஒரே பதில்இதுகுறித்து, ராஜா கிருஷ்ணதேவராயர் கூறுகையில், “முதல்வர் தனிப்பிரிவில் கொடுக்கும் மனுக்களுக்கு, எவ்வித விசாரணையும் நடத்தாமல், அதிகாரிகள் ஒரே பதிலை திரும்ப திரும்ப அனுப்புகின்றனர். நடவடிக்கை எடுக்காமலே, நடவடிக்கை எடுத்து விட்டதாக பதில் அனுப்புகின்றனர்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

P THIRUNAVUKKARASU
ஜூலை 08, 2024 15:18

முதலில் டாஸ்மாக்கை ஒழிக்க சொல்லுங்கள் இரவில் 10 மணிக்கு மேல் இருக்கும் அனைத்து டாஸ்மார்க் பார் ஊழியர்களையும் ஆராய்ச்சி செய்யுங்கள் டாஸ்மார்க் இருப்பதை நிறுத்துங்கள் இதற்காக எத்தனை மனு கொடுத்தாலும் இதை வற்றி யாரும் கண்டு கொள்வதில்லை நியாயமான நடவடிக்கை வேண்டும் என்றால் இதுதான் நியாயமா ஹெல்மெட் போடாமல் சென்றால் பிடிப்பது சிக்னல் தயார் செய்தால் பிடிப்பது இதழ் மற்ற குறியாக இருக்கும் போலீஸ் அதிகாரிகளே இதன் மீது நடவடிக்கை எடுங்கள் அப்போதுதான் உங்கள் பெயர் நிலைக்கும்


Lion Drsekar
ஜூலை 08, 2024 13:27

எந்த குறுநில மன்னர்கள் அல்லது மாமன்னர்கள் அலுவலகமாக இருந்தாலும் எல்லாமே நேர்மையாக நடக்கிறது என்று சொல்லும் தற்போதைய மத்திய அரசாக இருந்தாலும் எந்த பிரிவில் மனு கொடுத்தாலும் ஒரே நிலைதான் . அதற்க்கு பதிலாக ஆங்காங்கு கேட்க்கும் ... கொடுத்து காரியத்தை முடித்துக்கொள்வதே சிறந்தது . வேறு வழி இல்லை, நான் ஆர் டி ஓ அலுவலகத்துக்குச்சென்று எனக்கு தெரிந்த மிக உயர்ந்த பதவியில் இருப்பவர் பெயரைக்கூறி என்னுடைய கார் ஆர் சி புத்தகத்தை மாற்ற சென்றிருந்தேன் . அவரது நாற்காலியில் அமர்ந்திருந்த அவர் விவரம் கேட்க நானும் கூறினேன், உடனடியாக அவர் கடைநிலை ஊழியரிடம் சொல்லி என்னுடைய கார் அரசி புத்தக காப்பியை ஒரிஜினல் போலவே இருந்த அந்த புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டார் . நான் எடுத்துச்சென்ற அந்த ஒரிஜினல் ஆரிசிப்புத்தகத்தையும் பெற்றுக்கொண்டு நாளை வாருங்கள் என்று கூறி அதற்குள் எல்லாவற்றையும் முடித்துவைத்துவிடுகிறேன் என்று கூறினார் . மறுநாள் நான் சென்று நான் காணவேண்டிய அந்த அதிகாரியைக் கண்டேன் அவர் எனக்கு அப்படி எதுவுமே என் டேபிள் மீது இல்லையே என்று கூற நான் நடந்த விபரத்தைக்கூறிறேன் . அதற்க்கு அவர் நீங்கள் சொல்வது போல் ஒரு அதிகாரியும் இங்கு இல்லையே , அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லையே என்று கூறி, நான் மிகப்பெரிய அதிகாரியின் பெயரைக் கூற , ஒன்றும் கவலை வேண்டாம் நீங்கள் காவல் நிலையத்தில் ஆர் சி புத்தகம் வழியில் காணாமல் போய்விட்டது என்று ஒரு புகார் கொடுங்கள், ஆதை வைத்துக்கொண்டு நாம் உங்கள் வேலையை செய்து முடித்து விடலாம் என்று கூறி அலையாய் லாயவைத்து வேலையை முடித்துக்கொடுத்தார்கள், ஆகவே மேலிடம் சென்றால் எதுவும் நடக்காது, அவர்கள் நமது இரத்த பாந்தமாக இருந்தால் மட்டுமே நடக்கும், அறிந்தால் வாழ்வு, அறியாதவனுக்கு உலகையில் நடப்பே வாழ்வு . வந்தே மாதரம்


N.Purushothaman
ஜூலை 08, 2024 12:48

மனுவோட கவர்ல்ல காசு கொடுக்கலைன்னா எப்படி தீர்வு கிடைக்கும் ? தனி பிரிவுல இருக்கறவனுகளுக்கு குடும்பம் குட்டி இல்லையா ? லஞ்சம் கொடுத்தாலும் வாங்கிக்கிடனும் ...கேட்டாலும் கொடுக்கணும் ...


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூலை 08, 2024 10:06

திமுக ஆட்சியில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? ஓட்டை ஒருமுறையேனும் மாத்திப்போடுங்கள். இரண்டு திருட்டு திராவிட கட்சிகளையும் தவிருங்கள். அப்புறம் மாற்றத்தை எதிர்பாருங்கள். கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைபவன் போல வாக்குரிமையை வைத்துக்கொண்டு திருட்டு கூட்டத்தை குறை சொல்லி என்ன பயன்?


Apposthalan samlin
ஜூலை 08, 2024 10:43

ரெண்டு கழகத்தையும் விட்டு விட்டு நாம் தமிழர் இல்லை என்றால் விஜய் தேர்தெடுக்கலாம் .


முருகநாராயணன்
ஜூலை 08, 2024 08:41

மனுவை வாங்கி வெச்சுக்கறான்களே அதுவே பெரிய விஷயம். பொதுப்பிரிவில் மனு குடுத்தா உடனே பஜ்ஜி சாப்புட்ட கையை துடைச்சு போடுவாங்க.


R.RAMACHANDRAN
ஜூலை 08, 2024 07:07

மத்திய மாநில அரசுகள் மக்கள் குறை தீர் அமைப்புக்கள் எல்லாம் மக்களின் குறைகளை தீர்க்க அமைக்கப்பட்டது அல்ல.மாறாக அரசின் மூன்று அங்கங்களில் உள்ள குற்றவாளிகளை காப்பாற்ற ஏற்படுத்தப்பட்டவை ஆகும் என்பது அவைகள் சட்டம் மற்றும் விதிகள் ஆகியவற்றின்படி செயல்படாமல் தான்தோன்றித் தனமாக செயப்படுவதிலிருந்து தெளிவு. மக்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட அந்த அமைப்புகளின் நோக்கம் அரசாங்கத்தில் உள்ள குற்றவாளிகளால் சிதைக்கப்பட்டுவிட்டது.


Rajarajan
ஜூலை 08, 2024 06:08

இதென்ன பிரமாதம். இதைவிட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு. ஒரு மஞ்சள் அட்டையை தலைமை செயலகத்தில் காண்பித்தால், நேராக முதல்வரின் அறைக்கே வந்து சந்திக்கலாம். யாரும் தடுக்க மாட்டார்கள் என்றார். அப்படி எத்தனை பேர் சந்தித்தனர். குறைகள் மற்றும் மனுக்களை பெட்டியில் போட்டு பூட்டி, சாவியை முதல்வர் தன்வசம் வைத்துக்கொண்டார். அந்த மனுக்களின் தற்போதைய நிலை என்ன ?? யாமறியோம் பராபரமே.


Svs Yaadum oore
ஜூலை 08, 2024 05:46

எல்லா மனுக்களும் சமூக நீதி மத சார்பின்மையாக விசாரிக்கப்பட்டு அதன் படியே நடவடிக்கை எடுக்கப்படும் .....மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க முடியாது .....இது மத சார்பற்ற கூட்டணி விடியல் ஆட்சி நடக்குது ....


Kasimani Baskaran
ஜூலை 08, 2024 05:12

மனுவை கொடுத்து விட்டு வரக்கூட இப்படி ஒரு கெடுபிடி என்பது மக்களாட்சியில் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை