உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பறக்கும் டாக்சி தயாரிப்பில் சென்னை ஐ.ஐ.டி., மும்முரம்

பறக்கும் டாக்சி தயாரிப்பில் சென்னை ஐ.ஐ.டி., மும்முரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : சாலை போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் விதமாக, பறக்கும் டாக்சி தயாரிப்பில், சென்னை ஐ.ஐ.டி., ஈடுபட்டுள்ளது.போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, இந்தியா உட்பட உலக நாடுகள் பல, புதுபுது கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன. புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதில் முன்னோடியாக திகழும் சென்னை ஐ.ஐ.டி., நிறுவனம், தற்போது தனியார் நிறுவனத்துடன் இணைந்து, பறக்கும் டாக்சியை தயாரித்து வருகிறது. முழுதும் மின்சாரத்தில் இயங்கும் இந்த டாக்சி பயன்பாட்டுக்கு வந்தால், உலகின் முதல் பறக்கும் மின்சார டாக்சியாக இருக்கும்.இது, 200 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் உடையது. பறக்கும் டாக்சி தரையிறங்கவும், பறக்கவும், 15 அடி நீளமும், 15 அடி அகலமும் உடைய இடம் போதும். இந்த டாக்சியில், இரண்டு பேர் அமர்ந்து பயணிக்கலாம். இந்த டாக்சி பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், 25 கி.மீ., துாரத்தை, 10 நிமிடத்தில் சென்றடையலாம்.சென்னை ஐ.ஐ.டி.,யின் இந்த முயற்சிக்கு, மகேந்திரா நிறுவன தலைவர் ஆனந்த மகேந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தன் டுவிட்டர் பக்கத்தில், 'சென்னை ஐ.ஐ.டி.,யில் துவங்கப்பட்டு உள்ள ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம், அடுத்த ஆண்டுக்குள் பறக்கும் எலக்ட்ரிக் டாக்சியை உருவாக்க உள்ளது. 'இந்தியா முழுதும் வேகமாக வளர்ந்து வரும் தொழில் முனைவோர் வளர்ப்பு மையங்கள் காரணமாக, புதுமை படைப்பாளிகள் இல்லாத நாடு இந்தியா என, யாராலும் கூற முடியாது' என, குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

DARMHAR/ D.M.Reddy
மே 16, 2024 01:30

ஐ ஐ டி ன்முயற்சி திருவினையாக்கும்


subramanian
மே 14, 2024 21:44

இறைவன் கருணை புரிய வேண்டும் இந்த கண்டுபிடிப்பு பாரதத்தின் வளர்ச்சிக்கு உதவும்


Lion Drsekar
மே 13, 2024 13:42

இது உண்மை என்றால் நம் நாட்டின் தொழில் துறை அமைச்சர்கள் நேரில் என்று உடனடியாக அந்த துறையில் ஈடுபட்டு ஏற்றிக்கண்ட குழுமத்தை பாராட்டி, சுய தொழில் துவங்க , இந்த மாணவ மணிகளை வெளிநாட்டுக்கு துறத்தாமல் இங்கேயே அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுக்கவேண்டியது இவர்களது கடமை இப்படி வரவேற்று நீட்டினால் நம் நாடு வளர்ச்சி அடையும், வந்தே மாதரம்


கத்தரிக்காய் வியாபாரி
மே 13, 2024 13:05

இதை செயல்படுத்த, இந்திய நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் அந்த நிறுவனங்கள் லாபத்தை இந்தியாவில் முதலீடு செய்யுமாறு பார்த்து கொள்ளுங்கள்


V RAMASWAMY
மே 13, 2024 07:57

மிகவும் அவசியமான அருமையான முயற்சி தமிழக ஐ ஐ டி க்கு வாழ்த்துக்கள் பெருமையாக இருக்கிறது


Kasimani Baskaran
மே 13, 2024 05:55

பாதுகாப்பு அம்சங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ