உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காஞ்சி, சேலம், விழுப்புரத்தில் பயங்கரவாத ஆதரவு அதிகரிப்பு; சிறப்பு புலனாய்வு பிரிவு துவங்க முடிவு

காஞ்சி, சேலம், விழுப்புரத்தில் பயங்கரவாத ஆதரவு அதிகரிப்பு; சிறப்பு புலனாய்வு பிரிவு துவங்க முடிவு

சென்னை; பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் பெருகி வருவதால், காஞ்சிபுரம், சேலம் மற்றும் விழுப்புரத்தில், சிறப்பு புலனாய்வு பிரிவின் மூன்று யூனிட்டுகளை துவக்குவதற்கான பணியில், போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் பயங்கரவாத செயலை முறியடிக்க, கியூ பிரிவு, ஒ.சி.ஐ.யு., எனப்படும், ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு, ஏ.டி.எஸ்., எனப்படும், பயங்கரவாத தடுப்பு பிரிவுகள் செயல்படுகின்றன. இப்பிரிவு போலீசாருடன், காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு மற்றும் உளவுத்துறை போலீசார் இணைந்து செயல்படுகின்றனர்.அதேபோல, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகளும், தடை செய்யபப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது, தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, மத்திய, மாநில போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் பெருகி வருவது தெரியவந்துள்ளது. இதனால், இந்த மூன்று மாவட்டங்களிலும், பயங்கரவாத செயல்களை முறியடிக்கவும், அது தொடர்பான சவால்களை எதிர்கொள்ளவும், சிறப்பு புலனாய்வு பிரிவுகளை ஏற்படுத்தும் பணி நடக்கிறது.போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'மத பழமைவாதம் எனப்படும், பயங்கரவாத செயலுக்கு எதிராக தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். அந்த வகையில், காஞ்சிபுரம், சேலம் மற்றும் விழுப்புரத்தில், 2.38 கோடி ரூபாயில், சிறப்பு புலனாய்வு பிரிவின் மூன்று யூனிட்டுகளை அமைக்கும் பணி நடக்கிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

kumarkv
மார் 11, 2025 18:59

திநகரில் அதிகமாக உள்ளனர்


Mahendran Puru
மார் 09, 2025 08:03

தீவிரவாதம் என்றவுடன் பாய் போட்டு படுத்திருந்த கோஷ்டி முழிச்சிக்கிட்டது, எங்கே இந்துத்வ தீவிரவாதத்தை சொல்றங்களோன்னு. அவங்க யாரை சொல்றங்கன்னு செய்தியில் சொல்லலையே. இந்துத்வ அரசின் நிதி வஞ்சனையை படுத்துகிட்டேயாவது தட்டி கேளுங்கப்பா. ஆருத்ரா அண்ணாமலை முழுங்கிடவா போறாரு.


Tetra
மார் 05, 2025 16:44

இதெல்லாம் கண் துடைப்பு. தேசீய புலனாய்வை முடக்க நடத்தப்படும் நாடகம்


Vel1954 Palani
மார் 04, 2025 19:41

நடவடிக்கை எடுத்தால் சிறுபான்மையினர் ஓட்டு விழாதே. அந்த சார் யார் என்று கண்டும் காணாதது போல் இருக்க காரணம் என்ன ? யாரை காப்பாற்ற ? சிறு பிள்ளை கூட சொல்கிறது சிம்கார்ட ரெகார்டிங் பார்த்தால் தெரியும் என்று. போலீஸ் சுதந்திரமாக செயல்பட வில்லை.


manu putthiran
மார் 04, 2025 15:03

திமுக ஆதரவ தீவிரவாதிகளுக்கு எப்போதும் உண்டு..


user name
மார் 04, 2025 14:58

தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் ஹிந்து பழமைவாத பயங்கரவாத நபர்களின் கொட்டம் அதிகமாக உள்ளது , ஹிந்துமுன்னணி, ஹிந்துமக்கள் கட்சி, ஆர் ஸ் ஸ் பயங்கரவாதிகள் தேசபக்தர்கள் வேடம் தரித்து கலவரம் நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் , தமிழக காவல் துறை தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்


N Sasikumar Yadhav
மார் 04, 2025 15:45

பாலைவன மதங்களில் பழமைவாதிகள் இருப்பதை போல இந்து பழமைவாதிகள் இருந்திருந்தால் அந்நிய பாலைவன மதத்தவர்கள் பாரதநாட்டில் நிம்மதியாக இருந்திருக்க முடியாது


Tetra
மார் 05, 2025 16:48

பேர் போடாத ஆள். ஔரங்கஜீபின் வாரிசு இப்படித்தான் பதிவிடும்


kumarkv
மார் 11, 2025 18:54

எச்ச கலை


தமிழ்வேள்
மார் 04, 2025 13:20

மயிலாடுதுறை தஞ்சை திருவாரூர் மாவட்டங்களின் கிராமப் பகுதிகளில் அதிக கவனம் தேவை ....புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் இஸ்லாமிய தீவிரவாதிகள் நடமாட்டம் மிக அதிகம் ..தமிழக அரசு, போலீசுக்கு நன்கு தெரிந்தாலும் கண்டுகொள்வதில்லை ....


Tetra
மார் 05, 2025 16:49

ஓட்டு மேட்டர்


sethu
மார் 04, 2025 10:46

நாகர்கோயில், கடையநல்லூர் ,செங்கோட்டை கூடலூர் தேனீ அதிராமபட்டினம் ராமேஸ்வரம் கீழக்கரை வேதாரணியம் ,கோவை உக்கடம் பெரியமேடு சென்னை பெரியமேடு பாளையங்கோட்டை தஞ்சாவூர் மற்றும் காசிமேடு இவற்றிலும் கவனம் தேவை .


நிக்கோல்தாம்சன்
மார் 04, 2025 08:19

கோவையையும் சேர்த்துக்கொள்ளுங்க


sridhar
மார் 04, 2025 08:17

Too little, too late என்று தான் தோன்றுகிறது .


புதிய வீடியோ