உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., மறைமுக கூட்டணி: திருமாவளவன் சந்தேகம்

பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., மறைமுக கூட்டணி: திருமாவளவன் சந்தேகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெரம்பலூர்: பா.ஜ.,வுடன் அதிமுக மறைமுக கூட்டணி வைத்துள்ளது என வி.சி.க., தலைவர் திருமாவளவன் கூறினார்.பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவிற்கு ஆதரவு கேட்டு, திருமாவளவன் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்திய அரசியல் அமைப்பு சட்டமே மாற்றப்பட்டுவிடக் கூடிய பேராபத்து உள்ளது. ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மூலம் ஏழை எளிய மக்கள் நசுக்கப்படுகிறார்கள். அத்தியாவசிய பொருட்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி போடப்படுவதால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இண்டியா கூட்டணி

பா.ஜ., ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்காக நமது திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், இண்டியா கூட்டணியை உருவாக்கி இருக்கிறார். மோடி ஆட்சி வந்து விட்டால் அம்பானி, அதானி போன்ற முதலாளிகளே செழிப்புடன் இருப்பார்கள். ஏழை எளிய மக்கள் வஞ்சிக்கப்படுவார்கள். நல்லாட்சி மலர்ந்திட, பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை சுமார் 5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

மறைமுக கூட்டணி

அதற்கு விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் மீதமுள்ள நாட்களில் அயராது பாடுபட்டு பொதுமக்களிடம் ஓட்டு சேகரிக்க வேண்டும். மக்களை உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளிக்க செய்ய வேண்டும். பா.ஜ.,வுடன் அதிமுக மறைமுக கூட்டணி வைத்துள்ளது. அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை ஏவி, தொழிலதிபர்களை மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் 6500 கோடி ரூபாயை பா.ஜ., பெற்றுள்ளது. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

theruvasagan
ஏப் 07, 2024 15:27

என்னாது. விடியல்தான் இண்டியா கூட்டணியை உருவாக்கினாரா


Mohan das GANDHI
ஏப் 07, 2024 00:28

திருமாவளவன் திமுகக்காரன் கோபாலபுரம் பேட்டி வாங்கி கஞ்சா டாஸ்மாக் கள்ளச் சாராயம் கடத்தல் மன்னன் அதான் இன்றளவும் திமுகவின் கோபாலபுரம் தெலுங்கு குடும்ப காலை நக்கி வாழ்கிறான் இந்த பண்ணி மேய்த்த குருமா திருடன் இம்முறை சிதம்பரம் ரிசெர்வ் தொகுதியில் தலித் மக்கள் இந்துக்கள் திருமாவளவனுக்கு ஒட்டு போடாமல் ஆப்பு வைப்பார்கள் அங்கு பாமக பாஜக கூட்டணிகள் தான் ஜெயிக்கும்


Mohan das GANDHI
ஏப் 07, 2024 00:25

DMK+DRUG+MAFIA+TAASMAAK SARAYAM KAZHAGAM


Bala
ஏப் 06, 2024 21:26

உளறல் பிரச்சாரம் பிஜேபி ஊழல் அற்ற நல்லாட்சியை தந்து கொண்டாடு இருக்கிறது


Duruvesan
ஏப் 06, 2024 20:01

விடியளு உன்ன தோக்கடிக்கணும்னு பிஜேபி கிட்ட சொல்லி இருக்காராம


s vinayak
ஏப் 06, 2024 18:28

அதென்ன நமது திமுக ?


K.Muthuraj
ஏப் 06, 2024 18:11

இப்படியே இத்துப்போன விஷயத்தையே திரும்ப திரும்ப சொல்லணும் நீட், ஹிந்தி எதிர்ப்பு , பிஜேபி உறவு, கச்சத்தீவு எதுவும் இல்லைன்னா சமூக நீதி, வோட்டுப்பெட்டி கோளாறு ஆகுற மாதிரி ஒன்னும் செய்யலையா பேசுவதற்கு? விளங்கிடும்


vadivelu
ஏப் 06, 2024 16:51

வச்சா என்ன? ஆப்பு நமக்கு ?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை