உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராயம் இல்லை அது புதுச்சேரி சாராயம்!

கள்ளச்சாராயம் இல்லை அது புதுச்சேரி சாராயம்!

சென்னை:'தவறான தகவல்களையும், தேவையற்ற கண்டனங்களையும் தெரிவிப்பதை, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும்' என, அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:'விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி, மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் இறந்ததாக செய்திகள் வருகின்றன' என, பழனிசாமி அவசர கதியில் வழக்கம்போல அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேல்சிகிச்சை

திருவெண்ணெய்நல்லுார் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட, தி.குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன், 65.இவர் சாராயம் அருந்தி உடல்நிலை சரியில்லாமல், கடந்த மாதம் 30ம் தேதி மதியம், இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.பின், மேல் சிகிச்சைக்காக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து, வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் விசாரித்தனர். விசாரணையில், ஜூன் 29ம் தேதி இரவு, புதுச்சேரி மடுகரை அரசு சாராயக்கடையில், முருகன் என்பவர் ஐந்து பாக்கெட் சாராயம் வாங்கியது தெரிந்தது. அவர் இரண்டு பாக்கெட் சாராயத்தை குடித்துள்ளார். ஜெயராமனுக்கு இரண்டும், சிவசந்திரன் என்பவருக்கு ஒரு பாக்கெட்டும் கொடுத்துள்ளார். இவர்களில் ஜெயராமன், உடல்நலம் சரியில்லாமல், இரண்டு நாட்களாக சாப்பிடாமல் தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்ததால், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. முருகன், சிவசந்திரன் ஆகியோரை, போலீசார் 30ம் தேதி இரவு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். மூன்று பேரின் ரத்த மாதிரிகளை, விழுப்புரம் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பினர். அங்கு சோதனை செய்ததில், அவர்கள் அருந்தியது எத்தனால் என்பது தெரிந்தது.மருத்துவ சிகிச்சைக்குப் பின் இருவரும் கடந்த 3ம் தேதி மதியம் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

ஆதாயம் தேட

ஜெயராமன் அதிக அளவு மதுப்பழக்கம் உள்ளவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 4ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்ததாக, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் இருந்து சட்ட விரோதமாக சாராய பாக்கெட்டுகளை வாங்கி வந்த, முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். இதை சரிபார்க்காமல், இச்சம்பவத்தை கள்ளச்சாராய மரணம் எனக் கூறி, இறப்பிலும் பழனிசாமி அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ