உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு நிலத்தில் மரம் வெட்டினால் சிறை: விதிகளை கடுமையாக்குது வனத்துறை

அரசு நிலத்தில் மரம் வெட்டினால் சிறை: விதிகளை கடுமையாக்குது வனத்துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : அரசுக்கு சொந்தமான நிலங்களில் வளர்க்கப்படும் மரங்களை வெட்டுபவர்களுக்கு, சிறை தண்டனை விதிக்கும் வகையில், விதிகள் கடுமையாக்கப்படும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பசுமை தமிழகம் என்ற இயக்கம் துவக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் மரங்கள் நடும் பணி மேற்கொள்ளப்படுகிறது. முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது, ஒவ்வொரு பகுதியிலும், அரசு மற்றும் தனியார் வாயிலாக மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இதில், ஒவ்வொரு மரக்கன்று குறித்த துல்லியமான விபரங்களை, ஆன்லைன் முறையில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள மரங்களை பாதுகாப்பதிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இந்த வகையில் மரங்களை வெட்டுவதை தடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், தனியார் நிலங்களில் உள்ள விலை உயர்ந்த மரங்களை வெட்டுவது, இடம் மாற்ற பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது கடுமையாக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் பசுமை பரப்பை உயர்த்துவதில், பழைய மரங்களை பாதுகாப்பது மிக முக்கியம். குறிப்பாக, அரசுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள மரங்கள், சமூக விரோதிகளால் வெட்டி எடுத்து செல்லப்படுகிறது. இந்த வகையில் அரசுக்கு சொந்தமான நிலங்களில், மரங்களை அனுமதியின்றி வெட்டுவோருக்கு, சிறை தண்டனை உள்ளிட்ட, கடும் தண்டனை வழங்கும் வகையில் விதிகள் திருத்தப்பட உள்ளன. இதற்காக, புதிய சட்டத்துக்கான வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
ஆக 03, 2024 13:26

அரசு நிலத்தில் பொதுமக்கள் மரம் வெட்டினால் சிறைத்தண்டனை. ஆனால் ஆட்சியில் உள்ளவர்களும், அவர்களின் ஜால்ராக்களும் மரம் வெட்டினால் ஒரு தண்டனையும் கிடையாது.


Anonymous
ஆக 03, 2024 12:42

மழையை காரணம் காட்டி கணக்கு வழக்கு இல்லாமல் இப்போது நீலகிரியில் மரம் வெட்ட அனுமதி எப்படி வழங்கினார்கள்? அங்கு வனத்துறை ஆழ்ந்த உறக்கமா அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா? இப்படி மரம் வெட்டி வெட்டி, பேய் மழை பெய்யும் போது மண் சரிவு , மக்கள் உயிர் இழப்பு ஏற்படும் போது , இந்த வனத்துறை எங்கே இருக்குமோ, நீலகிரி மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.


Chennaivaasi
ஆக 03, 2024 10:21

சென்னை ஆதம்பாக்கம் நூறு அடி சாலையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையத்திற்க்காக சாலையோரம் நன்றாக வளர்ந்து இருக்கும் சுமார் இருபது மரங்கள் வேர்ப்பகுதி கான்க்ரீட் கலவை கொண்டு மூட பட்டு இருக்கிறது தானாக மடியட்டும் என்று. இவர்களுக்கு எல்லாம் இந்தியன் ஆயில் எப்படி அனுமதி கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.


Kalyanaraman
ஆக 03, 2024 09:01

ஆயிரக்கணக்கான பேர் முன்னிலையில் பட்டப் பகலில் டன் டன்னாக, லாரி லாரியாக பல நாட்களாக மணல் கடத்தப்பட்டிருக்கிறது. மலைகள் உடைக்கப்பட்டு, இன்று காணாமலே போயிருக்கிறது. இதற்கெல்லாம் என்ன தண்டனை கிடைத்ததோ அதே தான் இதற்கும். ஆண்மையற்ற சட்டங்களும் நீதிமன்றங்களுக்கும் பாமரனை மட்டுமே தண்டிக்கும். அதிகாரத்தில் உள்ளோரிடம் காலில் விழுந்து கிடக்கிறது.


அப்பாவி
ஆக 03, 2024 07:22

சிரிப்பு வருது... சிரிப்பு வருது...


Velan
ஆக 03, 2024 06:48

அப்பாவி மக்க ளுக்கா சிறை


மோகனசுந்தரம்
ஆக 03, 2024 06:11

இதெல்லாம் வெறும் பாமர மக்களுக்கு தான். அரசியல்வாதிகளோ அதிகாரிகளோ செய்தால் எந்த ஒரு குற்றமும் இல்லை. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.


Svs Yaadum oore
ஆக 03, 2024 06:08

ஊரெங்கும் ஆற்று மணல் கொள்ளை ....மரத்தோடு மொத்த மலையையும் வெட்டி பிறகு கேரளாவுக்கு ஏற்றுமதி ...கன்னியாகுமாரி மாவட்டம் கேரளா போல் படித்து முன்னேறிய சுற்று சூழல் விழிப்புணர்வு உள்ள மாவட்டம் ....அங்கு குளச்சல் துறைமுகம் வந்தால் சுற்று சூழல் பாதிக்கும் ...ஆனால் கன்யாகுமரியில் மலையை வெட்டி கேரளாவுக்கு அனுப்பலாம் ....அரசுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள மரங்கள், சமூக விரோதிகளால் வெட்டி எடுத்து செல்லப்படுகிறதாம் ......இந்த அரசு நிலம் எல்லாம் விடியல் திராவிடனுக்கு சொந்தமான நிலம்தான் ......


Mani . V
ஆக 03, 2024 05:41

Condition Apply: இது அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பொருந்தாது.


Kasimani Baskaran
ஆக 03, 2024 05:29

பல கல்லூரிகளில் ஒரே ஆள் பேராசிரியராக வேலை செய்தது தெரிய வந்தவுடன் அவரை தள்ளி வைத்தார்கள் தவிர அது ஒரு மோசடி குற்றம் என்று யாரும் சொல்லவில்லை. அதே போலத்தான் யார் மரம் வெட்டுகிறார்கள் என்பதை பொறுத்து அந்தச்செய்தி வெளிவருமா அல்லது வராதா என்பது முடிவு செய்யப்படும். மாடல் ஆட்சியில் அனைத்தும் விநோதமாகவே நடக்கும்.


மேலும் செய்திகள்