உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளக்குறிச்சி கலவர வழக்கு: 4 மாதங்களில் விசாரணை முடிவு: ஐகோர்ட்டில் அரசு தகவல்

கள்ளக்குறிச்சி கலவர வழக்கு: 4 மாதங்களில் விசாரணை முடிவு: ஐகோர்ட்டில் அரசு தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவரம் தொடர்பான வழக்கு விசாரணை, நான்கு மாதத்தில் முடிக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, 2022 ஜூலை 13ல் மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் மரணத்துக்கு, பள்ளி நிர்வாகம் தான் காரணம் எனக்கூறி, ஜூலை 17ல் போராட்டம் நடந்தது. பின், திடீரென வன்முறையாக மாறியது. இந்த கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.இந்நிலையில், வழக்கு விசாரணையை வேறு புலன் விசாரணை செய்யும் அமைப்புக்கு மாற்றக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பள்ளி தாளாளர் ரவிக்குமார் மனுத்தாக்கல் செய்து உள்ளார். இந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'கலவரம் தொடர்பாக, 519 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 166 பேரின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மனுதாரர் தரப்பில், 'வாட்ஸாப் குழுக்கள் வாயிலாக கூட்டத்தை கூட்டிய திராவிடமணி என்பவரையும், உயிரிழந்த மாணவியின் தாயையும், இதுவரை போலீசார் விசாரிக்கவில்லை' என, குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து, 'சம்பவம் நடந்து 2 ஆண்டுகளாகியும், இன்னும் அவர்களிடம் ஏன் விசாரிக்கவில்லை; நல்ல நாளுக்காக காத்திருக்கிறீர்களா; ஒருவேளை இருவருக்கும் எதிராக ஆதாரம் இருந்தால் வழக்கில் சேர்ப்பீர்களா?' என, நீதிபதி கேள்வி எழுப்பினார்.இதற்கு, 'மொபைல் போன் ஆய்வக பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம். விசாரணை நான்கு மாதங்களில் முடிக்கப்படும். ஆதாரம் இருந்தால், இருவரும் வழக்கில் சேர்க்கப்படுவர். 'விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என, காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று, ஜூலை 3ம் தேதிக்கு வழக்கின் விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

பல்லவி
ஜூன் 29, 2024 21:54

விசாரணை ஆரம்பித்த உடன் வெளி நாடு பயணம் போய்ட்டாருங்கோ


அகத்தியன்
ஜூன் 28, 2024 20:27

நாலு மாசம் முடியும்.போது ஏதாவது நொட்டை, சொள்ளை சொல்லி இன்னும் ரெண்டு மாசம் தவணை நாலு தடவை வாங்கிருவாங்க.


subramanian
ஜூன் 28, 2024 15:07

மற்றுமொரு பொய் கதை. உண்மையான குற்றவாளி எங்கோ ஜாலியாக இருப்பான்.


தமிழன்
ஜூன் 28, 2024 14:30

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும். மக்களுக்கு திமுக மீது நம்பிக்கை இருக்கிறது என்பது உறுதியானால், ஸ்டாலின் அமைச்சரவையை களைத்து விட்டு மீண்டும் முதல்வராக பொறுப்பு ஏற்கட்டும். இல்லை என்றால் ஏன் 99% வாக்குறுதிகளை நிறைவேற்றிய முதல்வர் பதவி விலக தயாராகவில்லை முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.


ஆரூர் ரங்
ஜூன் 28, 2024 10:25

கலவரம் செய்தது புள்ளி ராஜா கூட்டணி ஆட்கள்தான். இதையெல்லாம் விசாரித்து என்ன பயன்? மேல் கோர்ட் டில் தப்பிக்க வழி தெரிஞ்ச கூட்டம்.


Mohanakrishnan
ஜூன் 28, 2024 06:42

சொல்பவர்கள் முட்டாள்களா அல்லது பொது மக்கள் முட்டாள்களா, காலம் பதில் சொல்லும். உதாரணம் சொல்ல திராணி இருக்கா


Kasimani Baskaran
ஜூன் 28, 2024 05:22

ஒரு கோட்டை சிறிதாக்க பக்கத்தில் அதைவிட பெரிய கோடு போடவேண்டும் என்பதுதான் திராவிட கோட்பாடுகளிலேயே தலை சிறந்தது. அதை வைத்து பெரிய பெரிய பிரச்சினைகளை உருவாக்கி பழையதை பொது மக்கள் மறக்க வேண்டும் என்று சதுரங்க ஆட்டம் ஆடி உலகசாதனை படைத்தது வருகிறார்கள். ஆனால் சனாதன ஒழிப்பு என்று ஆரம்பித்ததில் சிக்கல்....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை