உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூகுளில் ஆபாச விளம்பரம் தடை விதிக்க கோரி வழக்கு

கூகுளில் ஆபாச விளம்பரம் தடை விதிக்க கோரி வழக்கு

சென்னை:கூகுளில் ஆபாச விளம்பரங்களுக்கு தடை கோரிய வழக்கில், மத்திய அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஞானேஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், 'இணைய பயன்பாட்டாளர்கள் கூகுள் தேடுதலில் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்து, சில தனியார் நிறுவனங்கள், தங்கள் விளம்பரத்தை பிரபலபடுத்தும் வசதியை, கூகுள் நிறுவனம் வழங்கி உள்ளது. 'இதை, சிலர், ஆபாச இணையதளங்களுக்கான பரிந்துரைகளை விளம்பரம் செய்கின்றனர். இதனால் பலருக்கு தர்மசங்கடமான நிலை ஏற்படுகிறது' என கூறப்பட்டுள்ளது.மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. இரண்டு வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசு மற்றும் கூகுள் நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை