உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

தமிழகத்தில், பிளஸ் 2 முடித்தோர் உயர்கல்வியை தொடரும் வகையில், இன்ஜினியரிங் கல்லுாரிகளின் சுயநிதி ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்கள்; கலை, அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள இடங்களில், வரும் 23ம் தேதி வரை மாணவர்களை சேர்க்கும்படி, கல்லுாரி முதல்வர்களுக்கு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி உத்தரவிட்டுள்ளார். இதுவரை விண்ணப்பிக்காதோர், வளாக சேர்க்கை வாயிலாக கல்லுாரிகளில் சேர முடியும்.விபத்துகளில், 40 சதவீதம், 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களால் ஏற்படுவதால், வாகனங்களை பாதுகாப்பாக இயக்குதல், சாலை பாதுகாப்பு போன்றவை குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, போர்டு நிறுவனத்துடன் சென்னை ஐ.ஐ.டி., புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சாலை பாதுகாப்பு திறன் மையம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.மிலாது நபி விடுமுறை, 16ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 17ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் பாஸ்போர்ட் சேவைக்காக முன்பதிவு செய்தோர், 16ம் தேதியன்று அதேநேரத்தில் சேவையை பெறலாம் என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை