உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 102 அடியை நெருங்கும் மேட்டூர் அணை: காவிரியில் 1.42 லட்சம் கனஅடி நீர் திறப்பு

102 அடியை நெருங்கும் மேட்டூர் அணை: காவிரியில் 1.42 லட்சம் கனஅடி நீர் திறப்பு

தர்மபுரி: கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 1.42 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 102 அடியை நெருங்கி உள்ளது.

அமராவதி அணை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணைக்கு வினாடிக்கு 3,421 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக அணையின் பாதுகாப்பு நலன் கருதி வினாடிக்கு 3,715 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கன அடிநீர் திறக்கப்பட்டு வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yk28boci&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமராவதி அணையின் 90 அடியில் 88 அடிக்கு நீர் நிரம்பிய நிலையில் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 1.42 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை

காவிரியில் தொடர்ந்து அதிகப்படியான நீர் வரத்து இருக்கும் நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் 102 அடியை நெருங்கி உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 101.70 அடியாக உள்ளது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவகுமார் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் உதவி பொறியாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட பொறியாளர்கள் பங்கேற்றனர். அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 81,552 கனஅடியில் இருந்து 93,928 கனஅடியாக உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

manivannan
ஜூலை 28, 2024 09:40

ஆற்று மணலிலே பல ஆயிரம் கோடி தூர்வாரி விட்டார்....


G. Srinivasan
ஜூலை 28, 2024 05:37

தண்ணீர் அதிக அளவில் இன்று முதல் வெளியேற்ற வேண்டும் 5000 கண்ணாடி கடைமடை வரை வந்து சேராது பிறகு அதிக அளவில் தண்ணீர் திறந்து கடையில் வீணாக போய் சேரும்


G. Srinivasan
ஜூலை 28, 2024 05:29

இரண்டு நாட்களில் அணை முழு கொள்ள வேட்டி விடும் ஆகையால் இன்று அதிக அளவு தண்ணீர் எடுத்து ஏரி குளங்களை நிரப்பு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் கொள்ளிடத்தில் வரும் நாட்களில் அதிக அளவில் தண்ணீர் திறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் கடலில் வீணாக கலந்து விடும்


kulandai kannan
ஜூலை 27, 2024 19:23

கர்நாடகாவை நீர்விடச் சொன்ன தமிழக அரசு, இன்னும் மேட்டூர் அணையைத் திறக்காதது ஏன்?


Muralidharan Srinivasan
ஜூலை 27, 2024 18:57

காவிரி தாய்க்கு, எனது மனமார்ந்த நன்றி, மற்றும் வணக்கங்கள் காவிரி தாயே, தமிழ் நாடு முழுக்க நல்ல வளங்களுடன், மக்கள் தர்ம நெரியுடன் இருக்க நீர் தான் அருள் புரிய வேண்டும் அம்மா????


JAINUTHEEN M.
ஜூலை 27, 2024 18:14

தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரி, மேட்டூர் அணையிலிருந்து வெளியாகும் உபரி நீரை அதில் நிறைத்து, அந்த நீரைக் கொண்டு விவசாயப்பரப்பை அதிகரித்து தமிழகத்தை செழிப்படையச்செய்ய மாநில அரசு வழிவகை செய்ய வேண்டும்.


Vaidyanathasami Balasubramanian
ஜூலை 27, 2024 17:59

துரை முருகன்1990 லிருந்த நன்றாக தூர்வாரிட்டார்


ஆரூர் ரங்
ஜூலை 27, 2024 15:03

ஏரி குளம் குட்டைகளையும் அவற்றை இணைக்கும் கால்வாய்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் ஏராளம். அவற்றை அகற்றாமல் ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டால் நிலத்துக்கு பதில் கடலுக்கே செல்லும். பாதியளவு கூட தூர் வாருவது கிடையாது. எனவே நிலத்தடி நீர் உயர வாய்ப்பு குறைவு. ஐநூறு ரூபாய்க்காக 40 க்கு 40 கொடுத்த பாவத்துக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்.


TSRSethu
ஜூலை 27, 2024 14:03

இந்த உபரி நீரை தேக்கி வைக்க நாம் ஏதாவது முயற்சி எடுத்திருக்கிறோமா ? தண்ணீர் இல்லையென்றால் ஒப்பாரி வைக்க மட்டும் நமக்கு தெரியும். ☹️


pv, முத்தூர்
ஜூலை 27, 2024 11:24

துரைமுருகனின் வேலை எளிதாகியது. இப்போது அவர் சென்று மிக்ச்சர் சாப்பிடலாம்


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி