உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை தெற்கு தொகுதியில் 22 பூத்களில் அண்ணாமலைக்கு 60 சதவீதத்துக்கு மேல் ஓட்டு

கோவை தெற்கு தொகுதியில் 22 பூத்களில் அண்ணாமலைக்கு 60 சதவீதத்துக்கு மேல் ஓட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை:கோவை தெற்கு தொகுதியில் பதிவான ஓட்டுகளில், 62 பூத்களில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, 50 சதவீதத்துக்கு மேல் ஓட்டுப்பெற்றிருக்கிறார். இதில், 22 பூத்களில், 60 சதவீதத்துக்கு அதிகமாக பதிவாகியுள்ளது. மேலும், 40 பூத்களில், 40 - 50 சதவீத ஓட்டு பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, நான்கு லட்சத்து, 50 ஆயிரத்து, 132 ஓட்டுகள் பெற்று இரண்டாமிடம் பெற்றிருக்கிறார். பதிவான ஓட்டுகளில், 32.79 சதவீதம். மாநகராட்சி எல்லைக்குள் அமைந்திருக்கும் கோவை தெற்கு, வடக்கு மற்றும் சிங்காநல்லுார் தொகுதிகளில் அதிக ஓட்டு பெற்றிருக்கிறார்.இதில், அ.தி.மு.க., கூட்டணி இல்லாமல், கோவை தெற்கு தொகுதியில், 53 ஆயிரத்து, 579 ஓட்டுகள் பா.ஜ.,வுக்கு கிடைத்திருக்கிறது. இது, 36.95 சதவீதம். இத்தொகுதியில் மொத்தம், 251 பூத்கள் அமைக்கப்பட்டன.பூத் வாரியாக அண்ணாமலை பெற்ற ஓட்டுகளை ஆய்வு செய்ததில், 80ம் எண்ணுள்ள பூத்தில் மொத்தமுள்ள, 575 ஓட்டுகளில், 414 ஓட்டுகள் பா.ஜ.,வுக்கு கிடைத்திருக்கிறது; 72 சதவீதம். தி.மு.க., - 87, அ.தி.மு.க., 39 ஓட்டுகளே பெற்றிருக்கின்றன. 81ம் எண்ணுள்ள பூத்தில், 534 ஓட்டுகளில், 388 ஓட்டுகள் பா.ஜ.,வுக்கு விழுந்திருக்கிறது; இது, 72.66 சதவீதம். தி.மு.க., - 98, அ.தி.மு.க., - 30 ஓட்டுகள் பெற்றுள்ளன.இதேபோல், 133ம் எண்ணுள்ள பூத்தில் மொத்தமுள்ள, 582 ஓட்டுகளில், 441 ஓட்டுகளை அண்ணாமலை பெற்றுள்ளார். இது, 75.77 சதவீதம். தி.மு.க., - 98, அ.தி.மு.க., - 28 ஓட்டுகளே பெற்றுள்ளன.195ம் எண்ணுள்ள பூத்தில் மொத்தமுள்ள, 190 ஓட்டுகளில், 133 ஓட்டுகளை அண்ணாமலை பெற்றுள்ளார். இது, 70 சதவீதம். தி.மு.க., - 36, அ.தி.மு.க., - 16 ஓட்டுகளே பெற்றுள்ளன. பூத் எண்: 43, 64, 65, 89, 116, 118, 132, 134, 135, 139. 147, 168, 197, 210, 212, 213, 222, 226 ஆகிய, 18 பூத்களில் பதிவான ஓட்டுகளில், 60 - 70 சதவீதத்தை அண்ணாமலை பெற்றிருக்கிறார். அதேநேரம், கிறிஸ்தவர், இஸ்லாமியர் வசிக்கும் பகுதிகளில், அண்ணாமலைக்கு ஒற்றை இலக்கம் மற்றும் இரட்டை இலக்கத்தில் மட்டுமே ஓட்டுகள் பதிவாகி இருக்கின்றன. அதாவது, 160ம் எண்ணுள்ள பூத்தில், 8 ஓட்டு பதிவாகியிருக்கிறது. இது, 1.02 சதவீதம். அதே நேரம், தி.மு.க.,வுக்கு 728 ஓட்டு விழுந்துள்ளது. இது, 92.39 சதவீதம். அ.தி.மு.க.,வுக்கு 28 ஓட்டுகளே பதிவாகியுள்ளது. இது, 3.55 சதவீதம். 172ம் எண்ணுள்ள பூத்தில், 7 ஓட்டு பா.ஜ.,வுக்கு பதிவாகியுள்ளது. இது, 1.13 சதவீதம். தி.மு.க.,வுக்கு, 566 ஓட்டு கிடைத்துள்ளது. இது 91.44 சதவீதம். அ.தி.மு.க.,வுக்கு 38 ஓட்டு விழுந்துள்ளது. இது, 6.14 சதவீதம். 169ம் பூத்தில் 14 ஓட்டு, அண்ணாமலைக்கு பதிவாகியுள்ளது. இது, 1.54 சதவீதம். தி.மு.க.,வுக்கு 796 ஓட்டு பதிவாகியுள்ளது. இது, 87.57 சதவீதம். அ.தி.மு.க.,வுக்கு 76 ஓட்டுகளே கிடைத்துள்ளன. இது 8.36 சதவீதம்.இதே போல், 170ம் பூத்தில் அண்ணாமலைக்கு 15 ஓட்டுகளே விழுந்திருக்கின்றன. இது, 1.99 சதவீதம். தி.மு.க.,வுக்கு 672 ஓட்டு கிடைத்துள்ளது. இது, 89.01 சதவீதம். அ.தி.மு.க.,வுக்கு 52 ஓட்டு விழுந்திருக்கிறது. இது, 6.89 சதவீதம்.தி.மு.க., வலுவான கூட்டணி அமைத்திருந்ததாலும், இத்தொகுதியில் சிறுபான்மையினர் ஓட்டு அதிகம் என்பதாலும், தி.மு.க., வேட்பாளர் கணபதி ராஜ்குமார், 42.71 சதவீத ஓட்டு பெற்றிருக்கிறார். அ.தி.மு.க., வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், 13.13 சதவீத ஓட்டுகளே பெற்றுள்ளார் என்ஓபது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை பெற்ற ஓட்டு சதவீதம் விபரம்

சதவீதம் - பூத் எண்ணிக்கை30 - 40 - 5140 - 50 - 6050 - 60 - 4060 - 70 - 1870க்கு மேல் - 4

14 பூத்களில்தி.மு.க,வுக்கு 2 இலக்கு ஓட்டு

தி.மு.க., வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு, தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், 14 பூத்களில், இரட்டை இலக்கு ஓட்டுகளே பதிவாகியுள்ளது. அதாவது, 65, 75, 80, 81, 90, 116, 133, 134, 139, 195, 203, 206, 211, 212 ஆகிய, 14 பூத்களில், இரட்டை இலக்கு ஓட்டுகள் பதிவாகியிருக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

pmsamy
ஜூன் 09, 2024 09:23

அண்ணாமலை வாங்குன அழகு நல்லா இருக்கு


Vasudevan
ஜூன் 09, 2024 08:07

1 லட்சம் வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கம் செய்தது குறித்து தீவிர விசாரணை செய்யவும்.


Manzoor M
ஜூன் 09, 2024 01:51

அதன் வேலையை சரியாக செய்கிறது


அரசு
ஜூன் 08, 2024 22:44

நீங்களும் என்னவோ ஆராய்ச்சி பண்ணி இவ்வளவு சதவிகிதம் வாங்கினார், இரண்டாவது இடம் வந்தார், அறுபது பூத்தில் அதிக ஓட்டு வாங்கினார் என்று எத்தனையோ கதை சொன்னாலும், அவர் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என்பது தானே உண்மை.


விஜய்
ஜூன் 09, 2024 00:47

வாய மூடு


Oviya Vijay
ஜூன் 08, 2024 22:43

எவ்வளவு நாளைக்கு தான் பா அண்ணாமலைக்கு முட்டு கொடுக்கப் போறீங்க... அரசியல் களத்துல அவர் ஒரு மிகப்பெரிய ஜோக்கர்.


Vikram
ஜூன் 09, 2024 00:48

சுடாலினை விடவா


S. Narayanan
ஜூன் 08, 2024 22:35

Annamalai should have scored more than 5 lac. vote. It was a known fact and everyone in kovai has confirmed. He has every right to seek justice through court. Will he take up the task?


Syed ghouse basha
ஜூன் 08, 2024 22:33

ஏதோ மர்மம் இருக்கு சட்டமன்ற தேர்தலில் பார்ப்போம்


மேலும் செய்திகள்