உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கு பின் துணை மருத்துவ படிப்பு கவுன்சிலிங்

எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கு பின் துணை மருத்துவ படிப்பு கவுன்சிலிங்

சென்னை:எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பு சேர்க்கை முடிந்த பின் தான், துணை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை துவங்கும் என, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவ படிப்புகளுக்கு, 67,079 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். ஜூலை இரண்டாவது வாரத்தில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக அதிகாரிகள் அறிவித்து இருந்தனர்.இதற்கிடையே, எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு முன்னதாக, துணை மருத்துவ படிப்பு சேர்க்கை நடத்தினால், மாணவர் சேர்க்கை குறையவும், இடையில் கைவிடவும் வாய்ப்பு இருப்பதால், தனியார் கல்லுாரிகள் எதிர்ப்பு தெரிவித்தன.அதைதொடர்ந்து, எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கு பின், துணை மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் நடத்த, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் முடிவு செய்துள்ளதாக, மருத்துவ கல்வி மாணவர் தேர்வுக் குழு செயலர் பி.அருணலதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ