| ADDED : ஜூன் 03, 2024 05:49 AM
சென்னை : அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, ஆக., 24, 25ம் தேதிகளில் பழனியில் நடக்கிறது. இதில், ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க, muthamizhmurugan maanadu2024.comஎன்ற தனி இணையதளம் துவங்கப்பட்டது. அதில், ஆய்வு கட்டுரைக்கான தலைப்புகள், வழிமுறைகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. கட்டுரைகள் தமிழ், ஆங்கிலத்தில் ஆறு பக்கங்களுக்கு மிகாமல், 'வேர்டு பைல்' வடிவத்தில் இருக்க வேண்டும். தமிழ் யூனிக்கோடு எழுத்துருவிலும், ஆங்கிலம் 'டைம்ஸ் நியூ ரோமன்' எழுத்துருவிலும் அமைதல் வேண்டும்.கட்டுரையின் முன்பக்கத்தில் கட்டுரை தலைப்பு, கட்டுரையாளரின் பெயர், முகவரி, எந்த நிறுவனம், கடவுச் சீட்டு எண், இ- - மெயில் முகவரி, மொபைல் போன் எண், புகைப்படம் அவசியம் இடம் பெற வேண்டும்.முழு கட்டுரையும் இணையதளம் வாயிலாக, வரும் 20ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, 94986 65116 அல்லது gmail.comஎன்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.கட்டுரைகளில் திருத்தம் செய்வதற்கு தேர்வு குழுவினருக்கு உரிமை உண்டு. தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரையாளர்கள் மட்டுமே பதிவுக் கட்டணம் இல்லாமல் அனுமதிக்கப்படுவர். கட்டுரைகள் ஆய்வு மலரில் இடம்பெறும். கட்டுரை தேர்வு, ஜூலை 1ம் தேதி வெளியாகும் என, அறநிலைய துறை தெரிவித்துள்ளது.