உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விளவங்கோடு தொகுதியில் பா.ஜ., சார்பில் நந்தினி

விளவங்கோடு தொகுதியில் பா.ஜ., சார்பில் நந்தினி

சென்னை:கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வாக, காங்கிரசை சேர்ந்த விஜயதரணி இருந்தார். இவர், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து சமீபத்தில், பா.ஜ.,வில் இணைந்தார். அதனால், லோக்சபா தேர்தலுடன், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, விளவங்கோடு தொகுதி பா.ஜ., வேட்பாளராக, வி.எஸ்.நந்தினி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், கன்னியாகுமரி மாவட்ட செயலராக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி