உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாபர் சாதிக் கூட்டாளியின் சொத்துக்கள் வங்கி கணக்குகளை என்.சி.பி., ஆய்வு

ஜாபர் சாதிக் கூட்டாளியின் சொத்துக்கள் வங்கி கணக்குகளை என்.சி.பி., ஆய்வு

சென்னை : திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஜாபர்சாதிக்கின் நெருங்கிய கூட்டாளி அப்துல் பாஷித் புஹாரியின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகளை, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.தி.மு.க., முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவருமான ஜாபர் சாதிக், 35, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளார். அவரது நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான திரைப்பட இயக்குனர் அமீரிடம், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை நடத்தி முடித்துள்ளனர். மீண்டும் விசாரணைக்கு ஆஜராக, 'சம்மன்' அனுப்பியதுடன், சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் மற்றொரு நெருங்கிய கூட்டாளியான அப்துல் பாஷித் புஹாரி என்பவரும், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். மார்க்க நெறியாளராக வலம் வரும் அப்துல் பாஷித் புஹாரியை, ஜாபர் சாதிக்கிற்கு அமீர் தான் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.அமீர் மற்றும் ஜாபர் சாதிக்குடன் சேர்ந்து அப்துல் பாஷித் புஹாரி, 'ஜூகோ ஓவர்சீஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் வாயிலாக, இரண்டு முறை, 18 லட்சம்ரூபாய்க்கு பேரீச்சம் பழங்கள் இறக்குமதி செய்துஉள்ளனர். அதேபோல, 4 ஏ.எம்., என்ற கடையையும் அப்துல் பாஷித் புஹாரி நடத்தி வருகிறார். இதுகுறித்து, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.சத்து மாவு உள்ளிட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்வது போல தான், ஜாபர் சாதிக் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு போதை பொருள் கடத்தி உள்ளார். அப்துல் பாஷித் புஹாரி பணம் முதலீடு செய்துள்ள ஜூகோ ஓவர்சீஸ் நிறுவனம் தொடர்ச்சியாக இயங்கவில்லை. ஆனால், ஜி.எஸ்.டி., வரி மட்டும் செலுத்தி உள்ளனர். இரண்டு முறை மட்டுமே பேரீச்சம் பழம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.இதனால், இந்த நிறுவனம் மீது, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இந்த நிறுவனமும், போதை பொருள் கடத்தலுக்காக துவங்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'ஜாபர் சாதிக், அமீர் மற்றும் அப்துல் பாஷித் புஹாரி கூட்டணியின் செயல்பாடுகள் அனைத்தையும் விசாரித்து வருகிறோம். அப்துல் பாஷித் புஹாரியின் சொத்துக்கள், வங்கி கணக்குகளை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. இவரின் பின்னணியில் ஜாபர் சாதிக் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்துல் பாஷித் புஹாரியிடம் நேரடி விசாரணை நடக்க உள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

karupanasamy
ஏப் 12, 2024 11:22

அப்படினா கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் சொத்துக்களையும் சேர்த்தா?


Ramesh Sargam
ஏப் 12, 2024 11:19

ஜாபர் சாதிக் கூட்டாளிகள் வரிசையில் ஸ்டாலின், அவர் மகன் அந்த உதவா நிதி, மற்றும் அந்த கடத்தல் காரனுக்கு சன்மானம் வழங்கிய அந்த காவல்துறை பெரிய அதிகாரி எல்லோரும் உள்ளனர்தானே அவர்களையும் விசாரிக்கவேண்டும் சட்டம் எல்லோருக்கும் பொது அவர்கள் சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டும்


A1Suresh
ஏப் 12, 2024 09:59

இதே குற்றம் அமெரிக்காவிலோ ஆஸ்திரேலியாவிலோ நடந்திருந்தால் இந்நேரம் வழக்கு விசாரணை முடிந்து, நீதிமன்றத்தில் வாத-பிரதிவாதங்கள் நடந்து, குற்றவாளிக்கு தண்டனை கிட்டியிருக்கும் ஆனால் நம் நாட்டிலோ விசாரணை மட்டும் வருடங்களுக்கு நடக்கும் குற்றவாளிக்கும் வயதாகி விடும் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்து வழக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்கள்


raja
ஏப் 12, 2024 08:09

டியர் ஒபிசெர்ஸ் மொதல்ல இந்த திருட்டு திராவிட குடும்பத் த ஆய்வு செய்யுங்க


D.Ambujavalli
ஏப் 12, 2024 07:39

இவர்கள் ஊரெல்லாம் சுற்றி சிறு தேவதைகளை பிடித்துக் கொண்டிருக்கட்டும் 'மூலவர்கள்' எப்போதோ காபந்து செய்து முடித்திருப்பர் ஒருவேளை அவகாசம் கொடுக்கக் கூட இந்த சுற்றல் இருக்குமோ ?


raja
ஏப் 12, 2024 07:34

....தமிழன் ரொம்ப சந்தோஷம் படுவான்


Duruvesan
ஏப் 12, 2024 06:06

சின்ன விடியலின் கணக்கு எப்போ ஆய்வு செய்வீர்கள்


Kasimani Baskaran
ஏப் 12, 2024 06:03

இவன் கூட்டாளிகளை மட்டுமல்ல அனைத்து அயலக அணிகளையும் ஆராய வேண்டும் சிங்கபூரில் முதலீடு செய்யும் அளவுக்கு தீம்காவுக்கு எங்கிருந்து பணம் வந்தது? அப்படி என்னதான் உழைத்து சம்பாதித்தார்கள்?


மேலும் செய்திகள்









புதிய வீடியோ