உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்....

செய்திகள் சில வரிகளில்....

ஆசிரியர் கல்வி பயிற்சியான, தொடக்க கல்வி டிப்ளமா தேர்வு, ஜூன், ஜூலையில் நடந்தது. இதற்கான முடிவுகள், வரும் 18ம் தேதி மாலை 3:00 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. முடிவுகளை, மாணவர்கள் படித்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும்; தனித்தேர்வர்கள் தாங்கள் விண்ணப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலும் அறியலாம். தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம், கன்னியாகுமரி மாவட்டத்தில், 1,100 மெகாவாட் திறனில் வேலிமலை நீரேற்று மின் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்கு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு, அனுமதி பணிகளை மேற்கொள்ள, தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ