உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டுச்சீட்டு முறை தேவையில்லை இயந்திரமே போதும்: துரைமுருகன்

ஓட்டுச்சீட்டு முறை தேவையில்லை இயந்திரமே போதும்: துரைமுருகன்

வேலுார்:''பழைய ஓட்டுச்சீட்டு முறை தேவையில்லை; இப்போது இருக்கும் ஓட்டுப்பதிவு இயந்திரங்களே போதும்,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலுார் மாவட்டம், காட்பாடி டான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில், அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், தி.மு.க., வேட்பாளருமான கதிர் ஆனந்த் குடும்பத்துடன் ஓட்டு போட்டனர்.பின், துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணிக்கு ஆதரவாக ஓட்டுப்பதிவு நடந்து வருவதாக தகவல் வருகிறது. இந்திய அளவிலும் இந்த கூட்டணிக்கே ஆதரவாக பதிவாகி வருகிறது. நிச்சயம் மத்தியில் மாற்றம் வரும்.மேகதாது அணையை கட்ட, தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக, கர்நாடக அரசு தவறான செய்தியை சொல்லக் கூடாது.அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு பல்வேறு வழக்குகளை போட்டுள்ளது. தண்ணீரை தேக்கி நாங்கள் தருகிறோம் என, அவர்கள் கூறுவதை ஏற்க முடியாது.நான் ஆயிரம் முறை சொல்லியுள்ளேன், பல இலாகாக்களை பார்த்துள்ளேன். எனவே, இது சாதாரணமாக நடக்க கூடியதல்ல. எந்த அணியில் நாங்கள் இருந்தாலும், தாய்க்கும், பிள்ளைக்கும், வயிறு வேறு தான்.இண்டியா கூட்டணி வந்தாலும், அணை கட்ட முடியாது. அவர்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, நமக்கும் உரிமை உள்ளது.ஏற்கனவே கர்நாடகா தண்ணீர் தருவதில்லை. இன்னொரு அணையை கட்டுவேன் என்று அவர்கள் சொன்னால் என்ன அர்த்தம்?யார் வந்தாலும், நதி நீர் இணைப்புக்கு முயற்சி எடுக்க வேண்டும். நாம் அதற்கு தயார். கோதாவரி - பாலாறு இணைப்புக்கு மத்திய அரசு தான் முயற்சி செய்ய வேண்டும்.பழைய ஓட்டு சீட்டு முறை தேவையில்லை, இப்போது இருக்கும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முறையே நல்ல முறை.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை