வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Kudos to the team for their kind efforts! Much appreciated.
கோவை: கோவையில் தாயை இழந்து தவித்து வரும் பிறந்து ஒரு மாதமே ஆன குட்டியை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். கோவை கோட்டத்திற்கு உட்பட்ட பன்னிமடை பகுதியில் உள்ள தடாகம் காப்பு வனப்பகுதியில், கடந்த டிச.,23ம் தேதி தாய் யானை ஒன்று அமர்ந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. அதன் அருகே பிறந்து ஒரு மாதமே ஆன குட்டியை மீட்ட வனத்துறையினர், அதனை யானை கூட்டத்துடன் சேர்க்க போராடி வருகின்றனர்.ஆனால், யானை கூட்டம் குட்டியை சேர்த்துக் கொள்ள மறுத்து வருகிறது. தொடர்ந்து, குட்டியை அதன் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தியும் எந்த பலனும் அளிக்கவில்லை. இதனால், யானை குட்டிக்கு தேவையான உணவுகளை கொடுத்து, வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.யானை கூட்டத்துடன் 6 முறை குட்டியை சேர்க்கும் முயற்சி தோல்வியடைந்தது. இதனால், குட்டியின் நலன் கருதி, அதனை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு கொண்டு சென்று பராமரிக்க முதன்மை வன உயிரின காப்பாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி குட்டி யானையை இன்று தெப்பக்காடு அழைத்துச் செல்ல வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
Kudos to the team for their kind efforts! Much appreciated.