உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இனி பி.எப்., கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் முன்பணம் பெறலாம்!

இனி பி.எப்., கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் முன்பணம் பெறலாம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பி.எப்., அலுவலகத்துக்கு செல்லாமல், வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து, ஒரு லட்சம் ரூபாய் வரை முன் பணம் பெறும், புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருக்கும் சந்தாதாரர்கள், தங்களது பி.எப்., கணக்கில் இருந்து குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்காகவும், வீடு கட்டுமானம், மனை வாங்குதல் மற்றும் மருத்துவ செலவுகளுக்காக,முன் பணம் பெற்று வருகின்றனர்.விண்ணப்பிக்கும் சந்தாதாரர்களுக்கு, தொகை விரைவாக கிடைக்கும் வகையில், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை உள்ளது.சந்தாதாரர் விண்ணப்பிக்கும் தொகை ரூ.50 ஆயிரத்துக்கு குறைவாக இருந்தால், ஆவணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில், உடனே அப்ரூவல் கிடைத்து விடும். இப்போது இந்த நடைமுறை, மேலும் 'அப்கிரேட்' செய்யப்பட்டு, முன் பணம் கூடுதலாகவும், விரைவாகவும் கிடைக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, ஒரு லட்சம் ரூபாய் வரை, ஆன்லைனில் பரிசீலனை செய்து, இரண்டு அல்லது மூன்று நாட்களில், சந்தாதாரரின் வங்கி கணக்கில் பணம் வந்து விடும். இந்த புதிய நடைமுறையை, பி.எப்., சந்தாதாரர்கள் வரவேற்றுள்ளனர்.

கொரோனா கால முன் பணம் நிறுத்தம்

கொரோனா நோய் தொற்றுக் காலத்தில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த போது, பி.எப்., சந்தாதாரர்கள் தங்களின் குடும்ப செலவுகளை சமாளிக்க, பி.எப்., கணக்கில் இருந்து கொரோனா கால முன் பணம் பெறும் நடைமுறை அமலில் இருந்தது. இப்போது அந்த நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

P. VENKATESH RAJA
ஜூன் 20, 2024 22:50

மாத சம்பளத்திற்கு பணிபுரியும் தொழிலாளர்களின் தூண்கள் பிஎஃப்..மகள், மகன் கல்யாண மண்டபம் செலவுக்கு உதவும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை